https://gumlet.assettype.com/vikatan/2020-08/d9ba4e86-c1c4-4e0e-bad2-88c682e8aaab/BB_4.jpg``தீபாவளிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும்!" மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் 78,512 பேர் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 971 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,21,246 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64,469 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா

இதில் 27,74,802 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது 7,81,975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகைக்குள் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அனந்தகுமார் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நேஷன் ஃபர்ஸ்ட்’ என்ற வெபினார் தொடரை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "தொற்றுநோயைக் கையாள்வதில் நாடு மிகவும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

Also Read: உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராகிறார் ஹர்ஷ் வர்தன்?! - தலைமைப் பொறுப்பின் பணிகள் என்ன?

கொரோனா பரவல் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்குள் கட்டுக்குள் வந்துவிடும். நம் நாட்டுத் தலைவர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் ஒன்றாக இணைந்து பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதல் கொரோனா தொற்று உறுதியாவதற்கு முன்பே இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, எனது தலைமையில் ஒரு குழுவை அமைத்தார், அந்தக் குழு தற்போது வரை 22 முறை சந்தித்து வைரஸ் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது.

ஹர்ஷ் வர்தன்

பிப்ரவரி மாதம் முதல் ஜூன் வரை நாட்டில் ஓர் ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது ஆய்வகங்களின் எண்ணிக்கை 1,583- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 1,000-க்கும் மேற்பட்டவை அரசு ஆய்வகங்கள். நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான சோதனைகள் நடக்கின்றன. நம் நாட்டின் பிபிஇ கருவிகள், வென்டிலேட்டர், என்95 முகக் கவசங்களின் பற்றாக்குறை இப்போது இல்லை. ஒவ்வொரு நாளும் 5 லட்சம் பிபிஇ கிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 10 உற்பத்தியாளர்கள் என்95 மாஸ்க்கையும் 25 தயாரிப்பாளர்கள் வென்டிலேட்டரையும் உற்பத்தி செய்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



from Latest News https://ift.tt/3hKNH7g

Post a Comment

0 Comments