https://gumlet.assettype.com/vikatan/2020-08/b5ccab4a-b1a3-4cea-9c85-ff6e5da25bc3/subreme_court.jpg`திறக்கவும், பராமரிக்கவும் அனுமதிக்க முடியாது!’- ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100-வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் சென்றபோது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 13 பேர் உயிரிழந்ததையடுத்து 2018ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. தமிழக அரசின் இவ்வுத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம்.

உச்சநீதி மன்றம்

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வு செய்ய நியமித்தது தீர்ப்பாயம். அக்குழு சமர்பித்த ஆய்வறிக்கையின்படி, `சில விதிமுறைகளுடன் மீண்டும் ஆலையை திறக்கலாம்’ என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. `ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை விதித்ததுடன், இவ்வழக்கை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த அனுமதியும் இல்லை’ எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலைத் தரப்பை அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

Also Read: ஸ்டெர்லைட்... தீர்ப்புக்குப் பிறகு அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆலைத்தரப்பு தொடர்ந்த வழக்கில், கடந்த 18-ம் தேதி, `ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவே தொடரும்’ எனக்கூறியதுடன், ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். இத்தீர்ப்பினை வரவேற்று போராளிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், கட்சியினர் ஆகியோர் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ஸ்டெர்லைட் ஆலை

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான வைகோ மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியேட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாகல் செய்தது.

அம்மனு, நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், `ஆலை மூடலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் பராமரிப்பு பணிகளுக்காக இடைக்கால அனுமதி வழங்கிட வேண்டும்’ என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஆலைத்தரப்பு முன் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை

மனுவை விசாரித்த நீதிபதிகள்,``சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. ஆலையைப் பராமரிக்கவும் அனுமதி அளிக்க முடியாது” எனக் கூறியதுடன், ஆலைத்தரப்பின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, மாசுக்வ்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும், விரிவான விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.



from Latest News https://ift.tt/3gHq9iA

Post a Comment

0 Comments