https://gumlet.assettype.com/vikatan/2020-08/a3feb94b-4759-4c40-bde4-8b98b5efb666/IMG_20200826_WA0033.jpgநாட்டு நாய்களுக்கெல்லாம் இவர் காவல் தெய்வம்..! - நாகை கூலித் தொழிலாளியின் மறுபக்கம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாய் - காவல் தெய்வம் என்பார்கள். ஆனால், நாய்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக இருக்கிறார் நாகையைச் சேர்ந்த தனசேகர்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை மீட்டு வைத்தியம் பார்த்து, 5 ஆண்டுகளாகப் பராமரித்து வரும் நாகை சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மக்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து காவலுக்காகவும், அழகுக்காகவும் விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வரும் நிலையில் நாகை அருகே ஒருவர் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஆதரவற்ற நாய்களுக்கு தாயாக இருந்து பராமரித்து வருகிறார்.

தனசேகர்

வளர்ப்பு நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக மனிதர்களால் பார்க்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராக மாறிவிடும். இதில் பெரும்பாலும், ஆடம்பர நாய்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்கள் மட்டுமே இடம்பெறும். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக தெருக்களில் அடிபட்டு ஆதரவற்றுக் கிடக்கும் நாய்களைப் பராமரித்து வருகிறார் நாகையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனசேகர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனசேகர், நாய்கள் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாகச் சுமார் ஐந்தாண்டு காலமாக ஆதரவற்ற நாய்களைப் பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக, குப்பைத் தொட்டியில் கிடக்கும் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் தொடங்கி விபத்தில் சிக்கிக் காயமடைந்த நாய்கள், சாலையில் சுற்றித் திரியும் நாய்கள் என இதுவரை ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை மீட்டு தனது வீட்டுக்கு மேலே கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறார்.

தான் பராமரிக்கும் நாய்களுடன் தன்சேகர்

மேலும், அவரால் வளர்க்கப்பட்டு வரும் நாய்களுக்கு, தான் வாங்கும் ஊதியத்தில் பாதிக்கும் மேற்பட்ட பணத்தைச் செலவு செய்து தினம்தோறும் ரொட்டி, முட்டை, சிக்கன் என விதவிதமான உணவுகளை அளித்து பராமரித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த நாய்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் சிறிதும் யோசிக்காமல் நாய்களை சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு சென்று மருத்துவம் பார்த்து வந்து பராமரித்து வருகிறார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தன்னலமற்ற செயலைச் செய்து வரும் தனசேகரைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ஆடம்பர வளர்ப்பு நாய்களை மட்டுமே வளர்ப்பதில் பலர் அதிக ஆர்வம் காட்டி வரும் சூழலில், ஆதரவற்ற நிலையில் இருக்கும் நாட்டு நாய்களையும் ஓர் உயிர் என நினைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விதைத்து வருகிறார் தனசேகர். காவல் தெய்வமாகக் கருதப்படும் நாய்களைப் பராமரிக்கும் இவரே அவற்றுக்கு காவல் தெய்வம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



from Latest News https://ift.tt/3gEULkx

Post a Comment

0 Comments