https://gumlet.assettype.com/vikatan/2020-08/3b6b78fb-384d-431a-9506-2d9bd55743dd/N_Srinivasan_MS_Dhoni.jpg``சிலருக்கு வெற்றி தலைக்கேறி விடுகிறது..!'' - ரெய்னா குறித்து ஸ்ரீனிவாசன்

ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் சர்ச்சைகளால் சூழப்பட்டிருக்கிறது. அனைத்து அணிகளும் பயிற்சிகளை தொடங்கியிருக்கின்றன. ஆனால், சிஎஸ்கேவில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதால் மொத்த அணியும் ஹோட்டல் அறைகளில் முடங்கியிருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த ஷாக் பத்தாது என 'ரெய்னா இந்த சீசனில் பங்கேற்க மாட்டார்' என்ற அடுத்த அதிர்ச்சி செய்தியும் வெளிவந்தது. முதலில் தனிப்பட்ட காரணங்களால் ரெய்னா வெளியேறியதாக சிஎஸ்கே தரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்போது பின்னணியில் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்குமான கருத்து வேறுபாடுதான் அவர் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த விரிவான கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

Also Read: ``தோனி மட்டும் ஸ்பெஷலா?'' கோபத்தால் கரியரையே முடித்துக்கொண்ட ரெய்னா! #SureshRaina #CSK

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா பிரச்னை குறித்து பிரபல ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு (Outlook) பேட்டி அளித்திருக்கிறார்.
தோனி, ஸ்ரீனிவாசன்

"அந்த காலத்து நடிகர்கள் போல 'தான் ஒரு பெரிய நட்சத்திரம்' என அதிக பந்தா காட்டுகின்றனர் சில கிரிக்கெட் வீரர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றுமே ஒரு குடும்பம் போல ஒன்றாகவே இருந்திருக்கிறது. மூத்த வீரர்கள், இளைய வீர்ர்கள் என அனைவருமே ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்படுவது எப்படி எனக் கற்றுக்கொண்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரையில் யாருக்காவது தயக்கம் இருந்தாலோ, திருப்தி இல்லையென்றாலோ விலகிவிடுங்கள் என்றுதான் சொல்லுவேன். நான் யாரையும் எதையும் செய்ய வற்புறுத்துவதில்லை. சில நேரங்களில் சிலருக்கு வெற்றி தலைக்கு ஏறிவிடுகிறது... அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது" என்று ரெய்னா வெளியேறியது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ஸ்ரீனிவாசனின் இந்தப் பேட்டி கிரிக்கெட் உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Suresh Raina
கொரோனா பிரச்னை குறித்தும் ரெய்னா வெளியேறியது குறித்தும் தோனியுடன் பேசியதாகவும் அவர் எப்போதும் போல இதையும் கூலாக கையாண்டு வருவதாகவும் மொத்த அணியும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

"தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவலைப்பட ஒன்றுமில்லை என எனக்கு உறுதியளித்துள்ளார் தோனி. இந்த பின்னடைவுகளுக்கு நடுவே வீரர்களுடன் ஜூம் கால் ஒன்றில் அவர் பேசியிருக்கிறார். யாருக்குத் தொற்று இருக்கிறது, இல்லை எனத் தெரியாது என்பதால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவருமே இளம் வீரர்கள் என்பதால் விரைவில் குணமாகிவிடுவார்கள் என்றும் என்னிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தோனி."

Dhoni

மேலும் பேசுகையில் ரெய்னா வெளியேறியது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

"சிஎஸ்கேவில் சிறந்த வீரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இளம் வீரர்களில் ஒருவரான ருத்துராஜ் கேய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேன். இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. இந்த சீசனில் அவர் பெரிய ஸ்டாராக உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை."

"இன்னும் சீசன் தொடங்கவே இல்லை. அதற்குள்ளாகவே விலகிவிட்டார் ரெய்னா. பணம் உட்பட எதையெல்லாம் இழக்கப்போகிறோம் என்பது ரெய்னாவுக்கு சீக்கிரம் புரியும்." என்றும் கூறியிருக்கிறார் ஸ்ரீனிவாசன்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஆடுவதற்காக ஒரு சீசனுக்கு 11 கோடி ரூபாய் ரெய்னா பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


from Latest News https://ift.tt/3hIhGgc

Post a Comment

0 Comments