https://gumlet.assettype.com/vikatan/2020-08/4d6982fc-2d93-4d71-8783-fdb4c1009075/IMG_20200831_WA0003.jpg`செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல; இனி பேச வேண்டாம்!’ - ஹெச்.ராஜா

``தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. தோழமை சுட்டுதலோடு குறைகளைச் சொன்னால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். எல்லைமீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தும்'' என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாகப் பேசியுள்ளது அ.தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜா

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,``நீதிபதி சந்துரு என்பவர் மத்திய நிதியமைச்சரை ஊறுகாய் மாமி என விமர்சனம் செய்துள்ளார். அநாகரீகமான வார்த்தையை பதிவிட்டவர் எப்படி நீதிபதியாக இருக்க முடியும். அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

அண்ணாமலை பா.ஜ.க-வில் சேர்ந்ததால் பலருக்கும் ஏன் எரிச்சல்? சகாயம், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்துகொண்டு இந்துவிரோதக் கண்காட்சியை லயோலா கல்லூரியில் திறந்து வைத்ததைப் பற்றி யாரும் பேசவில்லை ஏன்?

ஹெச்.ராஜா

செல்லூர் ராஜூ என்ன பெரும் விஞ்ஞானியா? நகரத்தார் சமுதாய பெண்கள் குறித்து பேசி சிக்கலில் மாட்டிய செல்லூர் ராஜூவை, அப்போது காப்பாற்றியது யார் என துணை முதல்வரிடம் கேட்டால் தெரியும். செல்லூர் ராஜூவும் ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல. இனி பேச வேண்டாம்.

Also Read: `டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்தில் வளரவில்லை!’ பா.ஜ.க-வைச் சீண்டிய அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழக அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என் பொறுப்பு. தமிழக அரசை விமர்சிப்பது கிடையாது. தோழமைச் சுட்டுதலோடு குறைகளைச் சொன்னால் பரிகாரம் செய்ய வேண்டும். எல்லைமீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஹெச்.ராஜா

பா.ஜ.க-வை இழிவாகப் பேசுவது பிரதமரைப் இழிவாக பேசுவதுபோல, கூட்டணியைக் கெடுக்கணும், பிரச்னை கொடுக்கனும் என நினைக்கிறார்களா? நாடு முழுவதும் பா.ஜ.க இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியது என்ற நிலையைக் கொண்டு வந்ததுபோல, தமிழகத்திலும் தேர்தலுக்கான தயாரிப்புகள் இருக்கும்'' என்று ஹெச்.ராஜா பேசினார்.



from Latest News https://ift.tt/3lssEbY

Post a Comment

0 Comments