https://gumlet.assettype.com/vikatan/2020-08/fb92bb35-fc35-4481-bd97-a541d2ea701b/WhatsApp_Image_2020_08_31_at_6_15_18_PM.jpeg`சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் போற்றப்பட்டவர்!’ - பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

உடல்நிலை சரியில்லாமல், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டிருந்தது. இருந்தும், தொடர்ந்து கோமாவில் இருந்துவந்தார்.

பிரணாப் முகர்ஜி

அதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்குசிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமாகி வந்த சூழலில் இன்று (31.08.2020) காலமானார்.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிராதி எனும் கிராமத்தில், 1935-ம் ஆண்டு, டிசம்பர் 11-ம் நாள், கமதா கின்கர் முகர்ஜி - ராஜலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 1957-ம் ஆண்டு, ஜூலை 13-ம் தேதி சுவ்ரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும். சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். தற்போது பிரணாப் முகர்ஜிக்கு 84 வயது.

பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017ஆண்டு வரை பதவி வகித்துவந்தார். கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்டவர் அவர். இவருக்கு 2019-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

`இந்தியா, தனது பெருமைமிகு மகனை இழந்துவிட்டது’ என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி, தனது இரங்கல் குறிப்பில், ``பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவு தேசம் முழுவதையும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான தடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் அவர். ஒப்பீடுகளுக்கு மேலான அறிஞர், மிகச்சிறந்த அரசியல்வாதி, அரசியலைத் தாண்டியும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் போற்றப்பட்டவர்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.



from Latest News https://ift.tt/3lBg2zx

Post a Comment

0 Comments