முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்வின், நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, `இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான நரசிம்மராவின் பார்வை' என்ற தலைப்பில் கருத்தரங்கை தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கருத்தரங்கில் வீடியோ கான்பரன்ஸில் பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இந்தியா ஒரு பெரிய சக்தியாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான மாற்றங்களை பி.வி.நரசிம்மராவ் கொண்டு வந்தார். அவரின் லுக்-ஈஸ்ட் கொள்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்தியாவில் உள்ள பல்வேறு உள்நாட்டுக் காரணிகளின் தாக்கத்தையும், பிரிவினைவாத இயக்கங்களையும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வழிவகுத்த பொருளாதார சீர்திருத்தங்களையும் கருத்தில் கொண்டு, நரசிம்மராவ் உலகளாவிய கூட்டணிகளைத் திறமையாக நிர்வாகத்தை நடத்தியவர்.
கூட்டணிகளைத் திறமையாகக் கையாளும் திறமை, பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தைரியம் இந்தியாவை வளர்சிப் பதைக்கு கொண்டு சென்றது. அவர் தனது புத்திக்கூர்மையால் சிறுபான்மை அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கையாண்டார். அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை அடைந்ததில் அவருக்கு முக்கிய பங்குண்டு.
இந்தியா 1991-ம் ஆண்டில் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பி.வி. நரசிம்மராவ் என்ற அந்த சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்தான், நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு சென்றவர்’’ என்றார் சசிதரூர்.
நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சசிதரூர், ``நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் காலத்தில் அண்டை நாடுகளை அமைதியாகவும், புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் தாழ்மையாகவும் அணுகினார். ஆனால், தற்போது ஆணவத்துடனும் பிளவுபடுத்தும் தன்மையுடனும் இந்த அரசு செயல்படுகிறது’’ என்றார். மேலும், ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என நரசிம்மராவ் எண்ணினால், எதுவுமே மாறாதது போல் மென்மையாக அந்த விஷயத்தை மாற்றிக்காட்டும் திறன் படைத்தவர் என்றும் சசிதரூர் பாராட்டினார்.
இந்த கருத்தரங்கில் குழுத் தலைவர் ஜே.கீதா ரெட்டி, டிபிசிசி தலைவர் மற்றும் என்.உத்தும்குமார் ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், தெலங்கானா பொறுப்பாளர் குந்தியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
from Latest News https://ift.tt/2EJXyw3
0 Comments