தொற்று கட்டுக்குள் இருந்த நீலகிரியில் அன்லாக் செயல் முறைக்குப்பின் வைரஸ் பரவல் அதிகாகியிருக்கிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் நீலகிரியில் 1,100 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், நீலகிரியில் 40-க்கும் அதிகமான போக்குவரத்து ஊழியர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

விதிமுறைகளை மீறி அதிகளவு மக்களைச் சேர்த்து திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளை நடத்துவதால், கிராமங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000-த்தை எட்டிவிட்டது. பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,400 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதனை 2,000 பரிசோதனைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தட்டுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``15 நாள்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியும் பட்சத்தில் தொற்று பரவலைக் கட்டுபடுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முகக்கவசத்தை பொதுமக்கள் சரியான முறையில் அணிய வேண்டும். தற்போது கடுமையான காலகட்டத்தில் உள்ளதால், கொரோனாவைக் கட்டுபடுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும்.

சுற்றுலா பாஸ் அதிகளவு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், ரிசார்ட்களில் தங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி இ-பாஸ் வழங்கப்படும். டூரிசம் பிரிவில் வாரத்திற்கு 150 இ-பாஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியூர் நபர்கள், நீலகிரிக்கு வர வேண்டும் என்றால் கட்டாயம் இ-பாஸ் தேவை.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோவிட் கேர் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் கேர் மையங்களில் ஆக்சிஜன் லைன் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசு பஸ்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் கிருமி நாசினிகள் வழங்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read: நீலகிரி: ஒழுகும் கூரை... குளமாகும் பிரசவ வார்டு! - பந்தலுார் அரசு மருத்துவமனை அவலம்
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கட்டாயமாக இரட்டை முகக்கவசங்களை அணிய வேண்டும். பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துதான் பயணிக்க வேண்டும்.

பஸ்களில் ஏறும் போது கைப்பிடிகள், கம்பிகள் போன்றவற்றை பிடிக்கும்போது கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.
from Latest News https://ift.tt/2SeOyCh
0 Comments