மும்பையில் டி.வி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மால்வி மல்ஹோத்ரா, கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். சொகுசு காரில் வந்த ஒருவர், நடிகையை வயிற்றில் ஒரு முறையும், கைகளில் இரண்டு முறையும் கத்தியால் குத்தியிருக்கிறார். அங்கிருந்து மீட்கப்பட்ட நடிகை மால்வி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச்சென்ற நபர் தயாரிப்பாளர் யோகேஷ்குமார் மகிபால் சிங் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகை மால்வி மல்ஹோத்ரா காவல்துறையினரிடம், `யோகேஷ்குமார் மகிபால் சிங்கை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுப்புத் தெரிவித்துவிட்டேன். பின்னர், அவருடன் பேசுவதை நான் நிறுத்திவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
Also Read: `நான்கு கண்டிஷன்கள்!'- போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன்
மால்வி துபாயில் இருந்து கடந்த 25-ம் தேதி திரும்பிய நிலையில், அதற்கு அடுத்த நாள் அவரைச் சந்தித்த யோகேஷ்குமார் முயற்சித்திருக்கிறார். மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கடந்த 26-ம் தேதி இரவு 9 மணியளவில் மால்வி வெளியே வந்திருக்கிறார். அப்போது, சொகுசுக் கார் ஒன்றில் வந்திறங்கிய யோகேஷ், மால்வியை வழிமறித்து தன்னுடன் பேசுவதை ஏன் நிறுத்தினாய் என்று கேட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மால்வியை மூன்று முறை கத்தியால் குத்திவிட்டு, அந்த இடத்திலிருந்து யோகேஷ்குமார் காரில் தப்பியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக யோகேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெர்சோவா போலீஸார் தெரிவித்தனர். மருத்துவமனையில் உள்ள நடிகை மால்வி மல்ஹோத்ரா குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
from Latest News https://ift.tt/37OAmZt
0 Comments