கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தியன்று நடத்த வேண்டிய கிராம சபையைத் தமிழக அரசு திடீரென்று ரத்து செய்தது. இது கிராமம் சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அமைப்புகளின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அறப்போர் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து, தன்னாட்சி அமைப்பு, வாய்ஸ் ஆஃப் பீப்புள், தோழன் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, அக்டோபர் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கிராமசபை மீட்பு வாரமாகக் கடைப்பிடித்துவருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.

முதல் நாள் கிராமங்களில் மக்களை ஒருங்கிணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவள்ளூர், திருப்பத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்டன. இரண்டாம் நாள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கிராம சபை கூட்டத்தை நடத்த வலியுறுத்தி மனுக்கள் அனுப்பப்பட்டன. இந்த கடிதத்தின் மாதிரி வடிவம் விகடன் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அடுத்து தலைமைச் செயலாளர், தமிழக முதல்வர் ஆகியோர்களுக்கு கிராம சபை கூட்டத்தை நடத்த மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று கிராம சபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி ட்விட்டர் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன அமைப்புகள். கீழ்கண்ட லிங்க்குகளை க்ளிக் செய்தால் உங்கள் ட்விட்டர் பக்கத்தை அந்த கிராம சபை சார்ந்த வாசகம் இடம்பெறும்.
1. எடப்பாடி அண்ணாச்சி!
கிராமசபை என்னாச்சி?
2. குடிக்க தண்ணி வேணும்! கிராமசபையைக் கூட்டவேணும்!
3. மக்கள் குரல் கேட்கிறதா? இது மக்களாட்சி புரிகிறதா?
4. கிராமசபையை ரத்து செய்தது..
தவறு.. தவறு.. தவறோ தவறு!
5. டாஸ்மாக் வேணும்..
கிராமசபை வேணாமா?
6. மக்களாட்சியை மதிக்க வேண்டும்!
கிராமசபையை நடத்த வேண்டும்!!
7. அண்ணாச்சி.. அண்ணாச்சி.. ஜல்ஜீவன்வந்தாச்சு..
கிராமசபை ஒப்புதல் என்னாச்சு?

8. மத்திய அரசு சொன்ன மக்கள் திட்டமிடல் இயக்கம் என்னாச்சு?
கிராமசபை என்னாச்சு?
9. 100 நாள் வேலைத் திட்ட லேபர் பட்ஜெட் என்னாச்சு?
கிராமசபை என்னாச்சு?
10. உள்ளாட்சி மூன்றாவது அரசாங்கம்னு சொல்லுது சட்டம்!
அதை நடைமுறைப்படுத்த என்னங்க சார் உங்க திட்டம்?
11. ஆறுமாசத்துக்கு ஒரு கிராமசபை..
சொல்லுது சட்டம்..
என்னங்க சார் உங்க திட்டம்?
12. சட்டத்தின் ஆட்சி வேணும்! கிராமசபையைக் கூட்ட வேணும்!!
13. முகக்கவசம் போட்டுக்குவோம்!
சமூக இடைவெளியும் கடைபிடிப்போம்!!
கூட்டுங்க கிராமசபையை..
14. மதியை இழக்கச் செய்யும் மதுக்கடைக்கு திறப்பு விழா..
மக்கள் திட்டங்கள் தீட்டும் கிராமசபைக்கு மூடு விழாவா?
15. டாஸ்மாக் மதுக்கடையில் நிக்குதுங்க கூட்டம்..
எங்க ஊரு பிரச்னைகளைப் பேசறதுக்கு கூட்டுங்க கிராமசபைக் கூட்டம்!
from Latest News https://ift.tt/3lSykve
0 Comments