https://gumlet.assettype.com/vikatan/2020-11/03cced4d-0336-439a-ba2f-e3be602dc167/WhatsApp_Image_2020_11_30_at_12_30_30.jpeg`நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ரஜினி வரும்போது, ஜாலியான மூடில் வந்திருக்கிறார். வந்திருந்த மாவட்டச் செயலாளர்களில் சிலர் பேசும்போது, அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம்.

ஆலோசனை கூட்டத்தில் ரஜினி

``நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாக பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்கு போனால்.. சொதப்பி விடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15% பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கிறது. பலரது செயல்பாடுகள், வேலைகளில் திருப்தியில்லை. காசு சம்பாதிக்கனும்னு வர்றவங்க என்னை நம்பி இருக்காதீங்க. வேண்டாம்.. போயிடுங்க.

Also Read: பாபா அவதரித்த நாளில் இறுதி முடிவு... என்ன சொல்லப்போகிறார் ரஜினி?!

என் பேருக்கு ரொம்ப களங்கத்தை ஏற்படுத்தி வர்றீங்க. அவுங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. அதன்படி நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகத்தை மாற்றப்போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப்போகிறேன். நான் அரசியல்ல வரமாட்டேன்னு பலரும் ஒதுங்கீட்டீங்க. மக்கள் நல திட்டப்பணிகளை தீவிரமாக செய்வீங்கண்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரிவர செய்யலை.

ரஜினிகாந்த்

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செஞ்சாத்தான் ஜெயிக்கமுடியுன்னு நினைக்கிறேன். கொரோனா சீசன் என்பதாலே, யோசிக்கிறேன்” என்று ரஜினி காட்டமாக பேசியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

அப்போது சில மாவட்டச் செயலாளர்கள், ``சமூக வளைதளங்களில் விஷூவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. ``அதெல்லாம் முழுமையாக சரிபட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள்” என்றாராம்.

ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு, போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்ததும், பத்திரிகையாளர்களிடம் பேசினார்.. ``அவுங்க கருத்தை சொன்னார்கள். என்னோட பார்வையை அவுங்களிட்ட சொன்னேன். என்ன முடிவு எடுத்தாலும் கூட இருப்போம்ன்னாங்க. என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமோ முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்றார்.

Also Read: `எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்!’ - ரஜினிகாந்த் #LiveUpdates



from Latest News https://ift.tt/39qtLW1

Post a Comment

0 Comments