கடந்த சில வருடங்களில் இணையம் எந்த அளவு வேகமாக வளர்ந்திருக்கிறதோ அதே வேகத்தில் இணையச் சேவைகளும் வளர்ந்திருக்கின்றன. ஓலா, உபர் போன்ற ஆன்லைன் கேப் புக்கிங் செயலிகள் மக்களுக்கிடையே பிரபலமாகியிருக்கின்றன. இதனால் இன்று சந்தையில் தாக்குப்பிடிக்க இது போன்ற ஏதேனும் ஒரு தளத்தில் இணைந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர் கேப் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள். ஆனால், இதில் முறையான நடைமுறைகள் எதுவும் நிறுவப்படாமலேயே இருந்துவந்தது. இந்நிலையில்தான் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இது போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.
-
இனி ஒவ்வொரு சவாரிக்கும் 20% கட்டணம் இந்த நிறுவனங்களுக்கும் 80% கட்டணம் ஓட்டுநருக்கும் செல்லவேண்டும்.
-
அதிக தேவை இருக்கும் நெருக்கடியான நேரங்களில் இந்த செயலிகள் 'Surge fee' என விலையைத் தாறுமாறாக ஏற்றும். இனி அடிப்படை விலையிலிருந்து மூன்றரை மடங்குக்கு மேல் விலை ஏற்றப்படக்கூடாது.
-
சலுகைகள் என அடிப்படை விலையிலிருந்து 50 சதவிகிதத்திற்குக் கீழ் விலையைக் குறைக்கவும் கூடாது
Also Read: `டிரைவ் தி டிரைவர் ஃபண்ட்!’ - லாக்டவுனில் இந்தியா; ஓட்டுநர்களுக்காக நிதிதிரட்டும் ஓலா #corona
-
புக் செய்த பின் பயணத்தை ரத்து செய்தால் 'Cancellation fee' என அடிப்படை கட்டணத்திலிருந்து அதிகபட்சமாக 10% மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த கட்டணம் 100 ரூபாய்க்கு மேல் செல்லக்கூடாது.
-
ஒரு நாளில் அதிகபட்சமாக ஓட்டுநர்கள் 12 மணிநேரங்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டமுடியும். அவர்கள் 10 மணிநேர ஓய்வை பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தவேண்டும் இந்த நிறுவனங்கள்.
-
சேவைக்கு பணியமர்த்தும் முன் ஓட்டுநர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சி வழங்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து மோசமான ரேட்டிங் பெரும் ஓட்டுநர்களுக்குச் சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
-
அடையாள அட்டை, ஓட்டுநர் அட்டை, இரண்டு வருட ஓட்டுநர் அனுபவம், போலீஸ் வெரிஃபிகேஷன் என ஓட்டுநர் தரப்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என இந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் பாலியல் மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். இதையும் நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
-
ஓட்டுநர்கள் குறித்து வரும் குற்றச்சாட்டுகளை 24-72 மணிநேரங்களில் விசாரித்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும் இந்த நிறுவனங்கள்.
-
இது அல்லாமல் இது போன்ற சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் 24 மணிநேரமும் செயல்படும் ஒரு கட்டுப்பாட்டு அறையை நிறுவ வேண்டும். தங்கள் செயலியில் இயங்கும் வண்டிகள் அனைத்தும் இந்த கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
-
இந்த பயணங்கள் தொடர்பான தகவல்கள் இந்தியாவுக்குள் இருக்கும் சர்வர்களில் குறைந்தது 3 மாதங்களும் அதிகபட்சமாக 24 மாதங்கள் சேமிக்கப்பட்ட வேண்டும். அரசு நிர்ப்பந்தித்தால் இதை நிறுவனங்கள் வழங்க வேண்டியது இருக்கும். பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை அவர்கள் ஒப்புதல் இல்லாமல் வேறு யாருக்கும் தர முடியாது.
-
மேலும் ஓட்டுநர்களின் நலனை உறுதிசெய்யும் வண்ணம் குறைந்தது 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடும் 10 லட்சம் ரூபாய் டேர்ம் இன்ஷூரன்ஸும் கொடுக்கப்பட வேண்டும்.
from Latest News https://ift.tt/2Vj3VuY
0 Comments