தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிபடியாக தளர்வுகளும் வழங்கப்பட்டது. தற்போதைய ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையின் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ``டிசம்பர் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைகழகங்களில் இறுதியாண்டு இளநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்.
டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி
வழிகாட்டி நடவடிக்கைகளை பின்பற்றி சுற்றுலா தலங்களுக்கு அனுமதி!
நிலையான வழிகாட்டி நடவடிக்கைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படுகிரது
பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
உள் அரங்குகளில் மட்டும், அதிகபட்சம் 50% இருக்கைகள் அல்லது அதிகபட்சமாம 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி அவசியம்.
வரும் நாள்களில் நோய் தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பதிவில் இருந்து விலக்கு
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு நடைமுறை தொடரும்
Also Read: கொரோனா: ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு... 'அன்லாக் இந்தியா' நிலை இனி என்னாகும்?
from Latest News https://ift.tt/3lmVCbU
0 Comments