சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், `அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் ராஜா அரசுப் பள்ளி ஆசிரியராகவும் அவரது மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றியதும் தெரியவந்து. இதனை மறைத்து தான் இலவச பட்டா வாங்கியுள்ளனர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றங்கள் நீதிமன்றத்திற்கு தெரியவந்ததும் மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ``வறுமையில் வாழும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர், சமூக நலத்துறை செயலர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
Also Read: ``லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?" - உயர்நீதிமன்ற கிளை
மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் அரசு ஊழியர், இது போன்ற செயலில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசு ஊதியம் பெறும் ஒரு ஊழியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சமூக விரோத செயலாக நீதிமன்றம் கருதுகிறது. இவர்களை போன்றவர்களும் சமூக விரோதிகளே. முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட வேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும். அரசு ஊழியர் ஒருவருக்கு 5 பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நடவடிக்கை ஆகும் இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அந்த தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது” என்ற நீதிபதிகள், ``மனுதாரர் மற்றும் மனுதாருக்கு பட்ட வழங்கிய தாசில்தார் குறித்த முழு விவரங்களையும் விசாரணை செய்து தாக்கல் செய்யவேண்டும். மேலும் இவர்கள் மீது காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் போட உத்தரவிட்டு” வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
from Latest News https://ift.tt/3od6ACD
0 Comments