சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 16 வயது சிறுமியின் அம்மா புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன்னுடைய மகள், 3 மாத கர்ப்பமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி, மீனா என்பவர் மூலம் அறிமுகமான ஜேசுராஜ் (42) என்பவர் தன்னிடம் தவறாக நடந்ததாகக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். இதையடுத்து மீனா மற்றும் ஜேசுராஜிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கிண்டி மகளிர் போலீஸார் கூறுகையில், ``16 வயது சிறுமியின் அம்மாவுக்கும் சென்னை கண்ணகிநகர் எழில் நகரைச் சேர்ந்த மீனாவுக்கும் (40) பழக்கம் உள்ளது. அதனால் சிறுமியின் வீட்டுக்கு மீனா அடிக்கடி செல்வதுண்டு. அப்போது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மீனாவின் கணவர் குப்பை பொறுக்கி சென்னையில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் ஜேசுராஜிடம் விற்பதுண்டு. அந்தவகையில் ஜேசுராஜிக்கும் மீனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ், மீனாவிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார். இந்தச் சமயத்தில் மீனா மூலம் ஜேசுராஜிக்கு 16 வயது சிறுமி அறிமுகமாகியிருக்கிறார். அப்போது சிறுமியை மீனா மூலம் கட்டாயப்படுத்திய ஜேசுராஜ், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாது. குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை சிறுமிக்கு நடந்திருக்கிறது. இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அதுகுறித்து சிறுமியிடம் அவரின் அம்மா விசாரித்தபோதுதான், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ஜேசுராஜ், அவருக்கு உதவிய மீனா என்கிற குப்பம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறோம். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்திருக்கிறோம். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் கவுன்சலிங் அளிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.
``தங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பாலியல் கொடுமைகளை ஆரம்பத்திலேயே சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தால் இந்தப் பிரச்னை இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. சிறுமியின் கர்ப்பத்தைக் கலைப்பது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல அக்கம் பக்கத்தினரால் பாதிக்கப்படும் சிறுமிகள், பெண்கள், தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்" என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read: புதுக்கோட்டை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை! - மகிளா நீதிமன்றம்
இன்னொரு சம்பவம்
சென்னை அம்பத்தூர் கொரட்டூர் பகுதியில் அரக்கோணத்தைச் சேர்ந்த ராஜி (25) என்பவர் கணவரைப்பிரிந்து 2 வயது பெண் குழந்தையுடன் குடியிருந்து வருகிறார். ராஜிக்கும் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த அஜய்குமாருக்கும் (27) பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்தநிலையில் ராஜியின் 2 வயது பெண் குழந்தையை அஜய்குமார் அடித்து தொந்தரவு செய்திருக்கிறார். அதோடு 20.12.2020-ல் அந்தக் குழந்தையிடம் அஜய்குமார் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராஜி, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அஜய்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from Latest News https://ift.tt/381AXqv
0 Comments