https://gumlet.assettype.com/vikatan/2020-12/f11fbb60-c651-45d9-9790-f8f89e0c868c/vikatan_2020_12_04e8b840_e993_4654_8023_9ddbaae681d3_rajini_4.jpg`கட்சி தொடங்கவில்லை - ரஜினி முடிவு!’ - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

`டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு... ஜனவரி 2021-ல் புதிய கட்சி' என கடந்த 3-ம் தேதி அறிவித்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்தநிலையில், அண்ணாத்த ஷூட்டிங்கில் சிலருக்கு கொரோனா ஏற்படவே, அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தாலும், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு, ஹைதராபாத் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 27-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அன்றைய தினமே, தனி விமானத்தில் ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். இந்தநிலையில், தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ரஜினியின் முடிவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஜி.கே.வாசன் - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்

``ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும். புதிய கட்சி குறித்து அறிவிப்பு வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையும், உடல்நிலை சரியில்லை என்ற காரணம் ஏற்புடையது. நாட்டின் நன்மை கருதி மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு ரஜினிகாந்த் துணைநிற்க வேண்டும்."

துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி,``ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னர், தனது முடிவைப் பற்றி என்னிடம் கூறினார். அது தவிர்க்க முடியாதது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல், தமிழக மக்களுக்குச் சேவை செய்வேன் என்று கூறியுள்ளார். எனது கணிப்பில் அவர் தமிழக அரசியலில் 1996-ம் ஆண்டைபோலவே இப்போது தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்

பொன்முடி - தி.மு.க

``ரஜினி உடல்நிலை தேறி நீண்டகாலம் வாழ வேண்டும். அவரின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையிலும், சிலரின் தூண்டுதலால் அவர் கட்சி தொடங்க நினைத்திருந்தார். உடல்நிலை காரணங்களுக்காக அவர் அரசியலை விட்டுத் தள்ளி நிற்பது நல்லதுதான். ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் சிகிச்சையில் இருக்கும்போது கூட ஸ்டாலின், ரஜினிகாந்திடம் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியிருந்தார்."

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தனது தலைவரின் வார்த்தையை நம்பி ரஜினி மக்கள் மன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்காகவும், அவரின் ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் அவரை நம்பிய எண்ணற்றவர்கள் அனைவருக்காகவும் வருந்துகிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் - தலைவர், வி.சி.க

தனது உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினி, இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த வறட்டு கௌரவமும் பார்க்காமல் இப்படி ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் நூறாண்டுக் காலம் நலமுடன் வாழட்டும்.

Also Read: `மருத்துவ அறிக்கையால் அப்செட்?! ; ரத்த அழுத்தம் சீரானதும் டிஸ்சார்ஜ்’ - ரஜினிகாந்த் ஹெல்த் அப்டேட்ஸ்

சத்தியநாராயணன் - ரஜினிகாந்த் சகோதரர்.

அவரின் உடல்நிலை நன்றாக இருந்தால்போதும். அவர் அரசியலில் வந்து சாதிக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பார், ஆனால், உடல்நிலை காரணமாகக் கட்சி தொடங்க முடியாமல் போனது.

ரஜினிகாந்த்

சி.பி ராதாகிருஷ்ணன் - பா.ஜ.க.

ரஜினியைப் பொறுத்தவரை அவர் தமிழ்நாட்டின் ஒரு அங்கம். ஒரு நல்ல மனிதர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருப்பது அவரின் சொந்த விருப்பம். இந்த முடிவை விமர்சிப்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் சி.பி.எம்

கட்சி தொடங்குவதைவிட, உடல்நலம் என்பது மிகவும் முக்கியம். நல்ல உடல்நலம் பெற்று ஆரோக்கியத்தோடு அவர் திரைப்பணியைத் தொடரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஆரம்பிப்பது அவரின் சொந்த விருப்பம்.

கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் எம்.பி

``அடுத்த என்ன செய்யப்போகிறீர்கள் அர்ஜுனமூர்த்தி... மீண்டும் பா.ஜ.க-வுக்குத் திரும்பிவிடுவீர்களா? அப்புறம் தமிழருவி மணியன்?’’ என்று கேட்டுள்ளார்.

அன்வர்ராஜா - அ.தி.மு.க முன்னாள் எம்.பி

ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு அவர் உடல்நிலையைக் கருதி, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்தையும் கருத்தில்கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எதற்காக அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அந்த கொள்கைகளுக்கு அவரின் ரசிகர்களைத் துணைநிற்க வலியுறுத்துவார் என்று நினைக்கிறேன்.

அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்

சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ரஜினியின் முடிவை ஏற்று, அவரின் உடல்நலனைக் கவனிக்கும்படி ரசிகர்கள் பலர் கருத்துப் பதிவிட்டு வருகிறார்கள்.



from Latest News https://ift.tt/3hp1LEh

Post a Comment

0 Comments