https://gumlet.assettype.com/vikatan/2020-12/3e191df0-5a7e-4ea9-9c1a-cd591809325b/da753d31-4b42-4e89-bdd9-ff609755f746.jpgசென்னை: பகலில் செக்யூரிட்டி; இரவில் சைக்கிள் திருடன் - வடமாநில இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி

சென்னை திருவான்மியூர் பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு புகார்களும் வந்தன. கடந்த மார்ச் மாதம் திருவான்மியூர் பாலு தெருவைச் சேர்ந்த சரவணன் (42) என்பவர், வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத் திருடியதாக புகாரளித்திருந்தார். சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவி பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர், சைக்கிளைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன்அடிப்படையில் சைக்கிள் திருடும் இளைஞரை போலீஸார் தேடிவந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்கள்

இந்தநிலையில், திருவான்மியூர் பாலகிருஷ்ணன் சாலையில் திருவான்மியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளில் இளைஞர் ஒருவர் வந்தார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் சைக்கிளில் தப்பியோட முயன்றார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் திருவான்மியூர் பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரிடமிருந்து 9 விலை உயர்ந்த சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், ``திருவான்மியூர் பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள்களைத் திருடும் இளைஞரைத் தேடி வந்தநிலையில் சைக்கிளைத் திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒடிசாவைச் சேர்ந்த ஜெகநாத் (22) என்ற இளைஞர் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இவர், திருவான்மியூர், சீனிவாசநகர் 3-வது குறுக்குத் தெருவில் குடியிருந்து வருகிறார்.

ஜெகநாத்

Also Read: ஆர்.சி. புக் இல்லை... கம்ப்ளைன்ட் இல்லை... ஈஸியாகும் சைக்கிள் திருட்டு!

பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இரவு நேரங்களில் விலை உயர்ந்த சைக்கிள்களைத் திருடி விற்று வந்திருக்கிறார். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 சைக்கிள்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஜெகநாத் அளித்த தகவலின்படி பறிமுதல் செய்யபட்ட சைக்கிள்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர், `சைக்கிள் திருட்டு போனால் பலர் காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை. மேலும் சைக்கிள்களைத் திருடினால், அதை விற்பதிலும் சிக்கல்கள் இல்லை. அதனால்தான், சென்னையில் விலை உயர்ந்த சைக்கிள்களை குறி வைத்து ஒரு கும்பல் திருடிவருகிறது' என்றார்.

ஜெகநாதன் போலீஸாரிடம், எனக்கு மாதம் 8,000 ரூபாய்தான் சம்பளம். அதனால்தான் சைக்கிள்களைத் திருடினேன். விலை உயர்ந்த சைக்கிள்களைக்கூட 1,000 ரூபாய், 2,000 ரூபாய்க்கு விற்றேன் என்று கூறியதாக போலீஸார் கூறினர். ஜெகநாத்தை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/34PNM5g

Post a Comment

0 Comments