https://gumlet.assettype.com/vikatan/2020-12/3c3ed520-1b6e-4383-9cee-1314ec35dea2/d488bf56_a942_44f4_accf_9928a13961b0.jpgதஞ்சை: `ஓட்டைக் காசு கொடுத்து வாங்கவே மக்களை ஏழையாக வைத்துள்ளனர்!’ - கமல்ஹாசன் பேச்சு

``தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். ஏழ்மை நீங்கி விட்டால், மக்கள் சுயமாக ஓட்டுப்போடத் தொடங்கி விடுவார்கள். ஏழ்மையை வைத்துதான், ஓட்டை காசு கொடுத்து வாங்குகின்றனர்’’ என தஞ்சாவூர் பிரசாரத்தில் கமலஹாசன் பேசினார்.

பிரசாரத்தில் பேசும் கமல்ஹாசன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம்கட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும் தனியார் மண்டபம் ஒன்றில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கமல்ஹாசன் பேசுகையில், ``நேர்மையானவர்கள் மத்தியில் நின்று பேசுகிறேன் என்பது பெருமையாக உள்ளது. புதிய மாற்றத்துக்குத் தமிழகம் தயாராகிவிட்டது. மாற்றத்தைக் கொண்டு வரும் உரிமையும் கடமையும் மக்களாகிய உங்களிடம் உள்ளது. இதனால் தமிழகம் புதிய மாற்றத்தை நோக்கி நகரும்.

தஞ்சாவூரில் கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர் தொடங்கிய தமிழ் பல்கலைகழகத்தில் முறைகேடுகள் நடக்கிறது. அது மீட்டெடுக்கப்பட வேண்டும். முறைகேடுகளையும் களைய வேண்டும். இது போன்ற பல பிரச்னைகளை மக்கள் நீதி மய்யம் பட்டியிலிட்டு வைத்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அதைச் சரிசெய்யும்.

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். காரணம் ஏழ்மையை வைத்துதான், ஓட்டைக் காசு கொடுத்து வாங்க முடியும். ஏழ்மை நீங்கி விட்டால், மக்கள் சுயமாக ஓட்டு போட்டு விடுவார்கள்.

Also Read: திருச்சி: `பிரசாரம் தொடங்கும் முன்பே உடைந்த கண்ணாடி!’-தொண்டர்கள் மனநிலையை மாற்றிய கமல்

எம்.ஜி.ஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர்தான் என்னை முதலில் கையில் எடுத்து தோளில் சுமந்தார். ஏதோ நான் அரசியலுக்காக எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துகிறேன் என பேசுகிறார்கள். நான் எம்.ஜி.ஆர் குறித்து பேசிய பல வீடியோக்கள் உள்ளன. சிலர் தேர்தல் நேரத்தில் மட்டுமே எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவார்கள். எலெக்சன் முடிந்தவுடன் கலெக்சனில்தான் கவனமாக இருப்பார்கள். அது நிச்சயம் நடக்காது.

ஒரு காலத்தில் சரித்திரத்தில் தலைநகராக விளங்கிய தஞ்சை இன்று திறந்தவெளி சாக்கடை ஓடும் நகராக உள்ளது. தஞ்சையில் உள்ள 51 வார்டுகளில் சாக்கடை என்பது தீர்க்கப்படாத பிரச்சனை. நாங்கள் சோழர்கள் காலத்து ஏரிகளை சீரமைக்க வந்துள்ளோம். அதற்கு எங்கள் கரத்திற்கு நீங்கள் வலு சேர்க்க வேண்டும்.

பிரசாரத்தில் கமல்ஹாசன்

பல நல்ல நேர்மையான திட்டங்களுடன் வந்துள்ளோம். வெறும் அடுக்கு மொழி பேச்சு அல்ல, அலங்கார பேச்சல்ல, உங்களை கொஞ்ச நேரம் சந்தோசப்படுத்தி விட்டு, அடுத்த தேர்தலில் மட்டும் தலையைக் காட்டும் ஆட்கள் அல்ல நாங்கள். வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மும்முரமாக திறமையாளர்கள் பலரும் கூடி இதற்காக முன்வந்துள்ளார்கள்.

அவர்கள் செய்ய வேண்டிய கடமையை இத்தனை நாள் மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுத் தருவார்கள். என்னுடன் அரசியலுக்கு வந்துள்ளவர்கள் அனைவரும் தனக்கென்று தொழில் உள்ளவர்கள். தனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது அரசியலில் சம்பாதிக்க மாட்டார்கள்.

கமல்ஹாசன்

ஆண்ட, ஆளும் கட்சியினர், `நாங்கள் நேர்மையானவர்கள்’ என சொல்லிக்கொள்ள தைரியமோ, தகுதியோ கிடையாது. நாங்கள் பேசி, நீங்கள் கேட்பவை அல்ல எங்கள் அரசியல். நீங்கள் பேச, நாங்கள் செவி சாய்ப்பதுதான் எங்கள் அரசியல். மக்கள் குறைகளைச் சொல்ல கிராமசபைக் கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு நல்வழி எனக் காட்டினோம். இப்போது மற்றவர்கள் அதை போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகிறார்கள். நாங்கள் பழி வாங்கும்,பழி போடும் அரசியலை செய்யமாட்டோம். வழிகாட்டும் அரசியலை செய்ய வந்துள்ளளோம்.

Also Read: ``ரஜினி-கமல், அ.தி.மு.க-வுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!''- சீமான் சொல்லும் ரகசியம் என்ன?

விளைநிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுக்கும். விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மானியங்கள் வழங்க வேண்டும். அரசு நினைக்கும் மானியத்தை வழங்கக் கூடாது .வரலாற்றுச் சிறப்பு மிக்க சரஸ்வதி மஹால் நூலகம் மொத்தமாக களவுபோகும் முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கமல்ஹாசன்

இந்த சமூகத்தில் நானும் நீங்களும் பங்காளிகள். `கொரோனா நேரத்தில் பிரசாரத்துக்குச் செல்கிறீர்களே?’ எனக் கேட்டார்கள். பிரசாரத்தை நான் கூட்டத்தின் நடுவே செய்யவில்லை. குடும்பத்தின் நடுவே செய்கிறேன்.எனக்கு ஒன்று என்றால் அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள். நான் அதற்கு நன்றியாக அவர்களைப் பாதுகாப்பேன்’’ என்றார்.

Also Read: “விஜயகாந்த் மனிதர்... ரஜினி வியாபாரி... கமல் மனசாட்சியற்றவர்!”

பின்னர், இளம் பெண் ஒருவர், `அரசியலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால்தான் பெண்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள். உங்களுடையை கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?’ எனக் கேட்டார். அதற்கு, ``பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் மக்கள் நீதி மய்யம்தான்’’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/3rLhaUi

Post a Comment

0 Comments