https://gumlet.assettype.com/vikatan/2020-12/cb1f0a27-2db0-4171-a1fe-33f40ba995e0/rajini.jpg`ரஜினி அரசியலுக்கு வராதது தமிழக மக்களுக்குத்தான் இழப்பு!’ - போயஸ் கார்டனில் ரசிகர் நெகிழ்ச்சி

`டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு... ஜனவரி 2021-ல் புதிய கட்சி' என்று இந்த மாத தொடக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது ஏற்பட்ட உடல்நிலையில் குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்று நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு தனிவிமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். தன்னுடைய உடல்நிலை காரணமாக ``தான் அரசியல் கட்சி தொடங்கப்போவது இல்லை" என்று ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரஜினிகாந்த்தின் இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த்

கடந்த 2017-ம் ஆண்டு ``நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அப்போது முதல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு களப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், ரஜினியின் அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும் ரஜினி தெரிவித்திருக்கிறார்.

ரஜினி அறிவிப்புக்குப் பின்னர் போயஸ் கார்டன் வீட்டில் அவரது ரசிகர்கள் சிலர் திரண்டனர். அவர்களில் ஒருவர் ரஜினி மக்கள்மன்ற அண்ணாநகர் பகுதி செயற்குழு உறுப்பினர் எம்.எம்.டி.ஏ ரஜினி பாலாஜி. தனது பைக்கையே பிரசார வாகனமாக மாற்றி வைத்திருக்கும் பாலாஜி, `வாக்களிப்பீர் மக்கள் தலைவருக்கு’, `நமது சின்னம் ஆட்டோ’ உள்ளிட்ட வாசகங்களுடன் தேர்தல் பிரசாரத்துக்கே தயாராக இருந்தார். ரஜினியின் இந்தத் திடீர் அறிவிப்பு குறித்து பாலாஜியிடம் பேசினோம்.

ரஜினியின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்ன சொல்வது... எந்த எதிர்பார்ப்புகளோடும் கட்சிக்கு வரக்கூடாது என்று தலைவர் முன்பே சொல்லியிருந்தார். எங்களுக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவரின் முடிவு எதுவோ அதைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்வதுதான் ஒரு உண்மையான ரசிகன், அவருக்குத் தரும் மரியாதை.

ரஜினி பாலாஜியின் பைக்

வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் அனுசரித்துதான் செல்லவேண்டும். அவரின் உடல்நலனை முதலில் பார்க்க வேண்டும். அவரின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு வந்திருப்பார். இது முடியாத சூழலில் எடுக்கப்பட்ட முடிவு. அவர் அரசியலுக்கு வராதது எங்களுக்கு இழப்பில்லை. தமிழக மக்களுக்குத்தான் இழப்பு. அவர் வந்திருந்தால், `நன்கு படித்த நபர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவேன்’ என்று கூறியிருந்தார். இதைத் தமிழகம் தவறவிட்டுள்ளது.

ரஜினி கட்சி தொடங்காதது வருத்தத்தைத் தருகிறதா?

தனிப்பட்ட வருத்தம் என்பது கிடையாது. அவர் வந்திருந்தால் ஒரு நல்ல அரசாங்கம் அமைந்திருக்கும். அதன்மூலம் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்தியா பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும். காரணம் இருக்கிறது. அவருக்கு பல மொழிகள் தெரியும். திறமையானவர். அதைப் பயன்படுத்தி தமிழகத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்திருப்பர். அது இல்லை என்பதுதான் வருத்தத்தைத் தருகிறது.

ரஜினி பாலாஜியின் பைக்
ரஜினி பாலாஜியின் பைக்

ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருந்தால், அவர் ஆட்சியைப் பிடித்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக. ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு அவருடையதாக இருந்திருக்கும்.

Also Read: `கட்சி தொடங்கவில்லை - ரஜினி முடிவு!’ - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?

தலைவர் கட்சி தொடங்கவில்லை என்றாகிவிட்டது. அதனால் என்னுடைய பைக்கில் இருக்கும் ஸ்டிக்கர்களை கண்டிப்பாக எடுக்கமாட்டேன். ``வாக்களிப்பீர் மக்கள் தலைவருக்கு" என்ற வார்த்தையை மட்டுமே எடுப்பேன். ரஜினியைப் போன்று ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று கண்டிப்பாக யாரேனும் வருவார்கள். காந்தியைப் போலவே அவரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அந்த காலத்தில் ரஜினியின் ரசிகர்கள் இல்லாமல் யாருமே இல்லை. நடிகர் விஜய், `அண்ணாமலையின் தம்பி நான்’ என்று சொல்லியிருக்கிறார். `பாபாதான் எனக்குப் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார். நாளை அவரே ரஜினியைப் போலவே ஊழலற்ற ஆட்சியைத் தரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனக் கூறலாம். அந்த நேரத்தில் அவருக்கு எங்களது ஆதரவைத் தெரிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ரஜினி பாலாஜியின் பைக்

எங்களைப் பொறுத்தவரைத் தலைவர் கட்சி ஆரம்பிப்பதை விட, அவரின் உடல்நலம்தான் எங்களுக்கு முக்கியம். அவர் எங்களுக்குக் கடவுள்போல. அவரை நேரில் பார்த்தாலே எங்களுக்கு நல்லது நடக்கும். அவர் நலமுடன் இருக்க வேண்டும். அதுவே எங்களுக்கு போதும். அதோடு அண்ணாத்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.



from Latest News https://ift.tt/3aQMniL

Post a Comment

0 Comments