சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். கடந்த சில நாள்களாகவே அவரது உடல் நிலை சீராக உள்ள காரணத்தால், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சசிகாலா எங்கே தங்குகிறார், எப்போது தமிழகம் வருகிறார் போன்ற விஷயங்களை சசிகலாவின் ஆலோசனையின் பெயரில் அவரின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு... டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?
சசிகலா தமிழகம் வருவது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம், ``31-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகும் சசிகலா, முதல் நாளில் பெங்களூருவில் தான் தங்குகிறார். ஆனால் அதற்கு அடுத்த நாள் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார்.
இதற்காக ஒரு தனியார் ரிசார்ட் முழுமையாக தயாராகி வருகிறது. பிப்ரவரி 1, 2 தேதிகளில் ரிசார்ட்டில் தனக்கு நெருக்கமானவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் சசிகலா. ரிசார்ட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதற்கு வசதியாக பார்க்கிங் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அங்கு தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தும் சசிகலா, பின்னர் சென்னை வரும் நாளை முடிவு செய்வார்” என்று தெரிவித்தினர்.
from Latest News https://ift.tt/3adyo4E
0 Comments