https://gumlet.assettype.com/vikatan/2021-01/ebfb2447-1ab4-4e66-b2f2-c0ca1f2dd624/IMG_20210130_WA0061.jpgதேனி : `ராஜமாதாவே வருக...’ - சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்கள்!

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா, தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விரைவில் அவர் தமிழகம் வருவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துவரும் சூழலில், அ.தி.மு.க’விற்குள், சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய அ.தி.மு.க நிர்வாகிகளை அ.தி.மு.க தலைமை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிவரும் சூழலில், துணை முதல்வரும், அ.தி.மு.க’வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மாவட்டத்தில் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

Also Read: `சொன்ன வார்த்தையை திரும்ப வாங்கிக்கிறேன்னு சொல்லுங்க’ -ஓ.பி.எஸ் குறித்து பேசிய பெண்; பதறிய ஸ்டாலின்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்துநிலையம், வேலப்பர் கோவில் செல்லும் வழி என நகரின் முக்கியப்பகுதிகளில் இன்று காலை சசிகலா படம் பொறித்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. அவை, அ.தி.மு.க ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞரணித் தலைவர் சின்னராஜா என்பவர் சார்பில் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டர்களில், “தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் அ.தி.மு.க’வின் பொதுச்செயலாளர் எங்களின் ராஜமாதாவே, வருக வருக...” என அச்சிடப்பட்டிருந்தது. இதனால், தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஜெயபிரதீப் முகநூல் பதிவு

Also Read: `குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க; அப்புறம் சவால் விடலாம்!’ - ஓ.பி.எஸ் மகனுக்கு தங்கம் பதில்

இரு தினக்களுக்கு முன்னர், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், தனது முகநூல் பக்கத்தில் சசிகலா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவு குறித்து, அமைச்சர் ஜெயக்குமார், “அது மனிதாபிமான அடிப்படையில் பதிவிட்டுள்ளார்” என கூறியிருந்தார். இருந்தபோதும், அ.தி.மு.க வட்டாரத்தில் ஜெயபிரதீப்பில் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், தேனியில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/2Ysqgrp

Post a Comment

0 Comments