https://gumlet.assettype.com/vikatan/2021-01/2c87bb84-7078-4b11-954b-c345189a4287/ec32cf8e_ecdc_4828_8ce1_2c8dfee034e3.jpgசென்னை: `எதற்காக என்னிடம் பேசுவதில்லை?’- காதலனால் பெண் இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 22 வயதாகும் பெண் ஒருவர், இன்று அதிகாலை பாத்ரூமுக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியில் வந்தார். அப்போது திடீரென அந்தப் பெண், `காப்பாற்றுங்கள், ஹெல்ப்...’ எனச் சத்தம் போட்டிருக்கிறார். அவரின் சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்தப் பெண் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு, குடல் சரிந்த நிலையில் கிடந்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை உடனடியாக மீட்ட பொதுமக்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பெண் இன்ஜினீயர்

பின்னர் இது குறித்து புழல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலும், மருத்துவமனையில் கத்திக்குத்து காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவல்களை போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பெண்ணின் காதலன் சுதாகரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

Also Read: சென்னை: ஃபேஸ்புக்கில் பெண்கள் போட்டோ; போனில் காதல் வலை! `வழிப்பறி’ நண்பர்கள் சிக்கியது எப்படி?

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண், சென்னை அம்பத்தூரிலுள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றிவருகிறார். இவரும் சுதாகரும் காதலித்து வந்திருக்கின்றனர். சுதாகர், பிசினஸ் செய்துவருகிறார். இந்தநிலையில் சுதாகரின் நடவடிக்கைகள் பிடிக்காத பெண் இன்ஜினீயர், அவருடன் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார். அதனால் சுதாகர் மனவேதனையடைந்திருக்கிறார்.

காதல்

`எதற்காக என்னிடம் பேசுவதில்லை?’ எனக் காதலியிடம் சுதாகர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அளித்த பதிலை சுதாகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சமயத்தில்தான் இன்று அதிகாலை காதலி வீட்டுக்கு சுதாகர் வந்திருக்கிறார். அப்போது வீட்டைவிட்டு வெளியில் வந்த காதலியிடம், தன்னைக் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த சுதாகர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் வயிறு, கைகளில் குத்தியிருக்கிறார். தற்போது பெண் இன்ஜினீயர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுதாகரைத் தேடிவருகிறோம்" என்றனர்.



from Latest News https://ift.tt/3r1wevU

Post a Comment

0 Comments