https://gumlet.assettype.com/vikatan/2021-01/d6c8b8d3-7128-4c34-a60d-73aace6886fc/IMG_20210130_WA0028.jpgமதுரை: `வீர சபதம் எடுப்போம்!’ - ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளார். இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடந்த நிலையில் இக்கோயில் திறப்பு விழா, குடமுழுக்கில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர்.

ஜெயலலிதா கோயில் விழாவில்

இன்று காலை நடந்த இந்நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நலிவுற்ற கட்சி நிர்வாகிகளுக்கு கன்றுடன் பசுக்களும், 234 தொகுதிகள சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு நிதி உதவியையும் முதலமைச்சர் வழங்கினார்.

குடமுழுக்குக்குப்பின் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை திறந்து வைத்தனர் முதல்வர். அதன் பின்பு பேசிய ஆர்.பி.உதயகுமார், "வசதியானவர்களுக்கும் செல்வாக்கானவர்களுக்கும் அரசியல் கட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் சாமானியர்களுக்கும் பதவிகளை கொடுத்தவர். அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியது பெருமையாக உள்ளது. அடுத்தும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்" என்றார்.

ஜெயலலிதா சிலை திறப்பு

எடப்பாடி பழனிசாமி, ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு ஆலயம் அமைத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். இந்த முயற்சியை எடுத்த ஆர்.பி.உதயகுமாரை பாராட்டுகிறேன்.

இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறவர்கள்தான் தெய்வம். அவர்களுக்குத்தான் இங்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் அவர்கள் மக்களுக்காக பாடுபட்டார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. நாம்தான் அவர்களின் பிள்ளைகள். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் எடுப்போம்" என்றார்.

எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு

ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ``அ.தி.மு.க மக்கள் சக்தியையும் தெய்வ சக்தியையும் நம்புகிற இயக்கம். மு.க.ஸ்டாலின் தினமும் புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார். வட நாட்டிலிருந்து ஆள் பிடித்து வந்தார், பின்பு வேல் பிடித்தார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வேலை பிடித்தபடி வருவார்கள். அவர் போடும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

வேலுடன் எடப்பாடி, ஓபிஎஸ்

தி.மு.க-காரர்கள் பத்து வருடமாக கை நமச்சலோடு உள்ளனர். நாடும் நாட்டு மக்களும் நம் பக்கம்தான் என்பதை இந்த விழா எடுத்துக் காட்டுகிறது. ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியதன் மூலம் ஆர்.பி.உதயகுமார் குடும்பம் புண்ணியத்தை தேடியுள்ளது" என்றார்.



from Latest News https://ift.tt/2NT2J13

Post a Comment

0 Comments