https://gumlet.assettype.com/vikatan/2021-01/7b6ebac3-d0dc-4437-a5ac-9474e8adce2a/22aff0ce-703e-4a0f-8f15-ec67e53a0635.jpgநிரவ் மோடி விவகாரத்தில் கட்ஜுவின் ஹிட்லர் ஒப்பீடு! - சர்ச்சைக்கு லண்டன் நீதிமன்றத்தின் பதில்

குஜராஜ் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் சுமார் 14,000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை இந்திய நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை நாடு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜு மத்திய பா.ஜ.க. அரசு குறித்தும், இந்தியாவின் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் பதிவு செய்த சர்ச்சையான கருத்துகளுக்கும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.

நிரவ் மோடி

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களைப் பெற்று அதனை திருப்பியளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் வரிசையில் முக்கியமானவர் வைர வியாபாரியான நிரவ் மோடி. இவர் மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,758 கோடி ரூபாய் தொழில் ரீதியான கடனைப் பெற்றுவிட்டு அதனை திருப்பியளிக்காமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

பின்னர் இவ்விவகாரமானது வெளி உலகுக்கு தெரிய துவங்கிய போது, இதில் அவ்வங்கியைச் சேர்ந்த முக்கியப்புள்ளிகள் சிலரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விஷயம் பெரிதாகத் துவங்கியதிலிருந்தே நிரவ் மோடியை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க இந்திய அரசாங்கம் முயற்சிகள் எடுத்து வந்தன. தனது தரப்பில், பல்வேறு வழக்கறிஞர்களை நியமித்து இதிலிருந்து தப்பித்துச் செல்ல வாதிட்டு வந்தார் நிரவ் மோடி. இதைத் தொடர்ந்து இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்கண்டேய கட்ஜு, `இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பினை மத்திய பா.ஜ.க. அரசினால் சீரமைக்க முடியவில்லை, செய்த தவறினை சீரமைக்காமல் நிரவ் மோடியை குற்றம்சாட்டி, அந்த திரையில் ஒளிந்துகொள்கின்றனர்.

மார்க்கண்டேய கட்ஜு

அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. அரசு இந்தியாவில் ஹிட்லரைப் போன்று சர்வாதிகார அரசியலை மக்கள் மத்தியில் நிகழ்த்தி வருகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தார். அத்தோடு, இந்தியாவின் நீதித்துறையிலும் பல்வேறு மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன, நேர்மையான முறையில் விசாரணை ஏதும் நடைபெறுவதில்லை என்று தெரிவித்திருந்தார். கடந்தாண்டே காணொளி வாயிலாக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற விசாரணையில் கட்ஜு ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், நிரவ் மோடியின் வழக்கோடு கட்ஜுவின் கருத்து குறித்தும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சாம் கூஸ், கட்ஜு தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டிற்கு அவர் போதிய ஆதாரத்தை சம்பிக்காத காரணத்தாலும், இக்குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லையென்றும் தெரிவித்து இவ்வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதேபோல் நிரவ் மோடி ஏற்படுத்தியுள்ள செயலின் தீவிரத்தினை ஆராய்ந்த நீதிபதி அவரை இந்தியாவிற்கு நாடுகடத்த ஒப்புதல் அளித்துள்ளார். நிரவ் மோடி மோசடி செய்துள்ள வங்கியின் கிளைகள் பெரும்பாலும் மும்பையில் உள்ளதால் அவரை மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய சிறைச்சாலையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read: வெஸ்டர்ன் கழிவறை, டி.வி, மெத்தை... நாடுகடத்தப்படும் நிரவ் மோடிக்குத் தயாராக இருக்கும் வி.ஐ.பி சிறை!

கொரோனா தொற்று காலத்தில் விசாரணையின் போது உடல்நலத்தில் குறைபாடுகள் ஏதும் ஏற்படாமலிருக்க அவருக்கு அங்கே பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுள்ளன. சிறைச்சாலையில் நிரவ் மோடி தங்கும் அறையினை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னரே இத்தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதில் கடைசி நேரத்தில் மீண்டும் மாறுதல்கள் ஏற்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதேபோல் ஊடக வெளிச்சத்திற்காகவே கட்ஜு தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்மொழிந்து வருவதாக சிலர் குற்றசாட்டும் வைக்கின்றனர். தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் அவ்வப்போது விவாதிக்கப்படும் நபராக வலம் வருவார் கட்ஜு.



from Latest News https://ift.tt/3sEbN93

Post a Comment

0 Comments