அதிகாரிகள் இருவர் பணிநெருக்கடி கொடுத்தன் காரணமாக, அங்கன்வாடி ஊழியர் ஒருவர், தற்கொலைக்கு முயற்சித்த சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முன்பு, தனது பிரனையை கண்ணீரோடு வீடியோவாக பேசி அனுப்பிவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read: கரூர்: பாதியில் நிற்கும் சாலை; முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்
கரூர் அருகே உள்ள தொழில்பேட்டை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 35). இவர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புலியூர் அருகே உள்ள வீரராக்கியம் குளத்துப்பாளையம் அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி ஊழியராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் அங்கன்வாடி மையத்துக்குப் பணிக்கு வந்திருந்த சந்தியா, 'எனது தற்கொலைக்கு காரணம் உயரதிகாரிகள் தான்' என கடிதம் ஒன்றை எழுதி வைத்தார்.
அதோடு, தன்னையும், தனது குழந்தைகளையும் உயரதிகாரிகள் இருவர் அவமானப்படுத்தியதால், தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து, வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், தனக்கு உடல் நிலை சரியில்லாத போது தொடர்ந்து பணியாற்ற கோரி வற்புறுத்தியதாகவும், அப்படி பணியாற்றவில்லையென்றால், பணி மாறுதல், சம்பளக் குறைப்பு மேற்கொள்வோம்' என்ற உயர் அதிகாரிகள் இருவர் மிரட்டியதாகவும் பேசியுள்ளார். அதோடு, அந்த இரண்டு அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், 'என்னை தொடர்ந்து அவமானப் படுத்தியதால் தான் தற்கொலைக்கு முயல்கிறேன். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்' என பேசியுள்ளார்.
பின்னர், அங்கிருந்து கிளம்பிய சந்தியா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தியா தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'பணி அழுத்தம் காரணமாக சந்தியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுவதால், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என சந்தியாவுடன் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர் குணா கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, கரூர் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அங்கன்வாடி ஊழியர்களையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
from Latest News https://ift.tt/3aYD8N0
0 Comments