https://gumlet.assettype.com/vikatan/2021-02/6f91f800-70af-4172-b246-a29c0415e01b/WhatsApp_Image_2021_02_27_at_18_06_53__1_.jpeg`கவலைப் படாதீங்கம்மா.. உங்களுக்கு நியாயம் கிடைக்கும்!’ - சாத்தான்குளம் பெர்சிஸை சந்தித்த ராகுல்

தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி விமான நிலைய உள் சாலையின் இரு புறத்திலும் நின்றபடியே பெண்கள் அவரை வரவேற்றனர். பிறகட்சிகளின் தலைவர்களின் வருகையின் போது வெயிலில் பல மணிநேரம் காத்திருந்து நின்றபடியே வரவேற்றனர். ஆனால், இங்கு சாலையின் இருபுறம் பந்தல் அமைக்கப் பட்டிருந்ததால் நிழலில் நின்றபடியே கையசைத்து வரவேற்றனர். தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

ராகுல் காந்தி

அக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ``ஒரு நாடு பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கியது. அந்த அமைப்புகள் சமநிலை பாதிக்கப்படும் போது நாட்டின் சமநிலையும் பாதிக்கப்படும். நாடாளுமன்றம், சட்டமன்றம் பஞ்சாயத்து, நீதித்துறை பத்திரிகை சுதந்திரம் ஆகியவை நாட்டை ஒன்றாக இணைத்து வைத்திருக்கக் கூடியவை.

வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடல்

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடந்து வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கபடுவதில்லை.

ஜனநாயகம் ஒரேயடியாக கொல்லப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதல், ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த பெருமுதலாளிகள் மூலம் நடக்கிறது. அவர்கள் அந்த அமைப்புகளுக்குள் ஊடுருவி அழித்து விடுகிறார்கள். இதனால், இந்தியாவில் ஜனநாயகம் இழந்துவிட்டது என்பது பல விதமாக வெளியில் தெரிகிறது.

ராகுல்

உண்மையான பிரச்னை என்னவென்றால் பணபலமும் அதனுடன் ஆர்.எஸ்.எஸ் இணைந்து, அமைப்புகளை சமநிலையை கெடுத்து அழித்து விடுகிறது. இது நாட்டின் சமநிலையையும் அழித்துவிடுகிறது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு. மாநிலங்களின் சுயசார்பு சிதைக்கப்படும் போது மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பும் பாதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான அதிகார சமநிலை பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. இந்தக்குழு இந்த கொடூரமான தாக்குதலில் இருந்து நாட்டை காப்பாற்றவே இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்றார்.

"மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என வழக்கறிஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பரிசோதிக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது தான் தற்போதைய பிரச்னை. மின்னணு வாக்குபதிவு இயந்திரம், வெளிப்படையான சோதனைக்கு அனுமதிக்கப்படும் போது அதை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.

"தேசிய குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "இச்சட்டம் ஒரு பாரபட்சமான சட்டம். வேளாண் வேளாண் சட்டங்கள் இந்திய விவசாய அமைப்பை சீர்குலைக்க உருவாக்கப்பட்டது. ஒரு சில கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. வேளாண் சட்டம், வேளாண்மையை முழுமையாகக் கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் சட்டமாகும்.

ராகுல் காந்தி

வேளாண் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டாம் என்று கூறவில்லை. சீர்திருத்தம் என்ற பெயரில் வேளாண்மையை சீர்குலைத்து விடக்கூடாது. வணிகர்கள் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்களுடன் கலந்துப் பேசி சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையின் மீது முழுமையானத் தாக்குதல் நடந்து வருகிறது. அதனை ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க., செய்து வருகிறது. பொதுவுடைமை, மதச்சார்பின்மை நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையாகும். இது வெறும் சட்டம் மட்டுமல்ல. நம் நாடு, நம் கலாசாரம். மதச்சார்பின்மை மீது நடக்கும் தாக்குதல், நமது கலாசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நடக்கும் தாக்குதல் ஆகும்" என்றார்.

தொடர்ந்து கோவங்காடு பகுதியிலுள்ள உப்பளங்களுக்குச் சென்றார். உப்பள பெண் தொழிலாளர்கள் குலவைச் சத்தம் எழுப்பி ராகுலை வரவேற்றனர்.அங்கு, உப்பளத்தின் வாறுகாலில் இறங்கி உப்பு வாரினார்.

உப்பளத்தில் ராகுல்

பின்னர், உப்புக் குவியலில் இருந்து ஒரு கூடை உப்பினை ராகுலுக்கு பரிசாக வழங்கினர். அப்போது பேசிய அவர், "உப்பளத்தில் கால் வைத்த போதே இது கஷ்டமான தொழில்னு தெரிஞ்சுக்கிட்டேன். வெறும் காலில் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாம உப்பு நீரில் நின்று வேலை செய்யுறீங்க. தினமும் உணவில் உப்பைச் சேர்த்து சாப்பிடுறோம். ஆனா, அந்த உப்பு எப்படி உற்பத்தியாகுத்துன்னு பலருக்கும் தெரியுறது இல்ல. உங்க கஷ்டத்தை நான் புரிஞ்சுக்கிட்டேன்" என்றார்.

ராகுலிடம், "எல்லா மருந்துகளிலும் உப்புத்தன்மை இருக்கு. கொரோனா காலத்துலகூட தண்ணீரில் உப்புவையும் மஞ்சள் தூளையும் கரைத்துதான் கிருமிநாசினியாக மக்கள் பயன்படுத்தினார்கள். காய்கறிகளை சமைப்பதற்கு முன் உப்பு கலந்த தண்ணீரில் கழுவினால், காய்கறிகளில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டிருந்தாலோ, கிருமிகள் இருந்தாலோ அவை இறந்துவிடும்" என உப்புவின் பயன்பாடு குறித்துச் சொன்னவர்கள், "உப்பளத் தொழிலாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதி முறையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மத்தியரசுக்குச் சொந்தமான பயன்பாடற்ற உப்பள நிலங்களில் வீடில்லாத உப்பளத் தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்கி வீடு கட்டித்தர வேண்டும்" என்பது போன்ற கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

டீக்கடையில் ராகுல்

நாசரேத் - சாத்தான்குளம் செல்லும் சாலை ஓரத்தில் டீக்கடையைப் பார்த்தவர், வண்டியை நிறுத்தச் சொல்லி, உளுந்தவடை சாப்பிட்டு காபி குடித்தார். "காபியும், வடையும் நல்லா இருக்குய்யா. வியாபாரம் எப்படிப் போகுது" எனக் கேட்டுவிட்டுக் கிளம்பினார்.

Also Read: கடலில் மீன் பிடிக்கப்போகும் ராகுல் காந்தி - தேங்காய்ப்பட்டணத்தில் ஒன்றரைக் கோடியில் தயாராகும் படகு!

தொடர்ந்து திறந்தவெளி வாகனப் பிரசாரத்தில் பேசிய ராகுல், "மோடி அரசு தமிழ் கலாசாரம், தமிழ் மொழி, பண்பாட்டை இழிவாக நடத்துகிறது. இந்தியா பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களை கொண்ட நாடாகும். அவைகள் சமமாக மதிக்கப்பட வேண்டும். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழகத்தில் மத்திய அரசின் அடிமை ஆட்சி நடந்து வருகிறது. மோடி தமிழக அரசை தொலைக்காட்சியாக பயன் வருகிறார். ஒரு அறையில் இருந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக அரசை ஆட்சி செய்து வருகிறார். இங்கு இருக்கும் முதல்வர் தமிழக மக்களை காப்பதை விட்டுவிட்டு பிரதமர் மோடியின் காலில் மண்டியிட்டு விழுந்துவிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த அடிமை ஆட்சியை அனைவரும் ஒன்றுபட்டு அகற்ற வேண்டும்" என்றார்.

பெர்சிஸிடம் பேசிய ராகுல்

தூத்துக்குடி, கோவங்காடு, பழையகாயல், முக்காணி, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, நாசரேத் ஆகிய ஊர்களில் பேசிவிட்டு இறுதியாக சாத்தான்குளத்தில் பேசினார். சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸின் செல்போன் கடை அருகிலுள்ள காமராஜர் சிலை முன்பு 13 நிமிடங்கள் பேசினார். நிறைவாக ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸிடம் பேசினார் ராகுல், "போலீஸ்காரங்களோட கொடூரத் தாகுதல்ல எங்க அப்பா, தம்பி ரெண்டு பேரையும் இழந்துட்டு நிற்கிறோம். ரெண்டு பேரோட போஸ்ர்மார்டம் ரிப்போர்ட் கூட இன்னும் எங்களுக்குக் கிடைக்கல. வழக்கு விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வழக்குல கைதான 10 பேர்ல ஒருவர் உயிரிழந்துட்டார். மீதியுள்ள 9 பேரிக்கும் தண்டனை கிடைக்கணும்" எனச் சொல்ல, "கவலைப் படாதீங்கம்மா. நிச்சயம் உங்ககுக்கு நியாயம் கிடைக்கும். என்னால முடிந்த உதவியைச் செய்யுறோம்" என்றார் ராகுல்.

Also Read: `மாஸ்க் கழற்றிய பிறகுதான் யார் என்று தெரிந்தது!’ -கொல்லம் கடலில் ராகுல்... படகில் நடந்தது என்ன?



from Latest News https://ift.tt/2O6Y6k1

Post a Comment

0 Comments