தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் தொடர் பிராசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மதுரையில் நடந்த தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு பேசும்போது,
"தற்போதுள்ள தமிழக அரசை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், முக்கியமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது. ஒற்றை சிந்தனையை நாட்டில் நிலைநாட்ட துடிக்கிறது. மதச்சார்பின்மையை அழிக்க பார்க்கிறது.
இதற்காக கார்பரேட் நிறுவனங்களை வளப்படுத்த நினைக்கிறது. மத்திய அரசு சொல்லும் வேலையை மட்டும் செய்கிறது தமிழக அரசு. விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழில்துறையினர் என அனைவருக்கும் எதிராக மத்திய அரசு உள்ளது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், மத்திய அரசின் 3 சட்டங்களுக்கு எதிராக டெல்லி நெடுஞ்சாலைகளில் கடந்த 3 மாதங்களாக போராடி வருகிறார்கள். விவசாயத்துறையில் கார்பரேட்டுகளின் பெரும் முதலீட்டை மத்திய அரசு விரும்புகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது விவசாயிகள் போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. விரைவில் தமிழகத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய் ஆகிவிடும்.
பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டும் வரியை வைத்துதான் பலத்திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், இவர்களோ கொரோனா பேரிடர் காலத்திலயே பொதுமக்களின் சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதை விட கார்பரேட்டுகளுக்குஅதிகமான சலுகைகள் வழங்கினார்கள். கடந்த ஆண்டில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அம்பானி, அதானி, டாடாக்கள் இந்த அரசால் அதிகமாக வளர்கின்றனர்.

சேலம் உருக்காலை, திருச்சி பெல், நெய்வலி நிலக்கரி நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. மக்களின் பணத்தில் இயங்கும் எல்.ஐ.சி உட்பட பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க திட்டமிடுகிறார்கள். அதிமுக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு கொண்டு வரும் சர்வாதிகார சட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ள தி.மு.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்
from Latest News https://ift.tt/3kvT24E
0 Comments