http://ifttt.com/images/no_image_card.png"தேர்தலுக்காக மக்களின் டிஜிட்டல் தகவல்கள் திருடப்படுகின்றன!"- உங்கள் கருத்து?! #VikatanPoll

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் மக்களைச் சென்றடைய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எஸ்.எம்.எஸ், இமெயில், போன் கால்கள், சமூக வலைதளக் கணக்குகள் எனப் பல்வேறு வகைகளில் நம் தனிப்பட்ட தளங்களை விளம்பரங்கள் ஆக்கிரமிக்கின்றன.

தற்போது தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் இத்தகைய விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். இதற்கு மூலதனமாக இருக்கும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் (பர்சனல் டேட்டா) தவறான முறையில் எடுக்கப்பட்டு விற்கப்படுவதாகவும் அதைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே உள்ளன. எங்கோ, யாருக்கோ, வியாபார ரீதியாகவோ, ஒரு வாடிக்கையாளராகவோ நாம் பகிர்ந்த நம் மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட தகவல்கள் இன்று தேர்தல் பிரசாரம் செய்யும் கட்சிகளிடம் எப்படிக் கிடைத்தன என்ற கேள்வியைப் பலரும் முன்வைக்கின்றனர்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


from Latest News https://ift.tt/3wbmHFM

Post a Comment

0 Comments