https://gumlet.assettype.com/vikatan/2020-11/c0560282-995d-4caf-bc8d-85d45583fa9e/vikatan_2020_11_757e6c50_7266_408b_ab4d_9c189962c326_IMG_20201119_WA0046.jpg``பிரியாணி, மதுபாட்டிலுக்காக மக்கள் ஓட்டுக்களை விற்கிறார்கள்” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியைத் தனி தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

இந்த விசாரணையின் போது, நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய நீதிபதிகள், ` பிரியாணி, மதுபாட்டிலுக்காகவும் மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்பனை செய்கிறார்கள். தங்களின் ஓட்டுக்களை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்'' என்றனர்.

மேலும், ``இலவசத் திட்டங்களை நிறைவேற்றக் கடன் பெறுவதால் மாநிலத்தில் நிதிச்சுமை கூடுகிறது. இந்த நிதிச்சுமையைச் சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாகக் காரணம் காட்டப்படுகிறது. இதனை மக்கள் உணரவேண்டும். நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறியாக்குகின்றனர்" என்றார்கள்.

மேலும் `` மக்களைச் சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது? தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா?'' என்று கேள்வியெழுப்பினர்.

மேலும், ``கடந்த நான்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சியினர் வழங்கிய வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? ஒவ்வொரு தொகுதியிலும் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியின மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தனி தொகுதியைச் சுழற்சி முறையில் ஏன் மறு சீரமைப்பு செய்யக்கூடாது?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



from Latest News https://ift.tt/3dov9Ji

Post a Comment

0 Comments