https://gumlet.assettype.com/vikatan/2021-03/411274e8-91a1-4f06-8533-0943c19f097e/IMG_20210330_WA0006.jpgகாரைக்குடி: கண்டாங்கிச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது தெரியாமல் வாக்குறுதி அளித்த ஹெச்.ராஜா!

காரைக்குடி, சுற்றுலா மற்றும் தனித்துவமான தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற நகரம். செட்டிநாடு கட்டிடக் கலை, ஆத்தங்குடி டைல்ஸ், அரியக்குடி விளக்கு, கண்டாங்கி சேலை உள்ளிட்ட பொருட்கள் காரைக்குடியின் தனித்துவ அடையாளங்கள். காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு 2019-ல் புவிசார் குறியீடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஹெச்.ராஜா

முடிக்கப்படாத பாதாளசாக்கடை திட்டங்கள், முறையற்ற சாலை வசதி, மேம்படுத்தப்படாத அரசு மருத்துவமனை, காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்டவை இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பேராசிரியை கற்பகம் இளங்கோவன் 75,136 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரான கே.ஆர்.ராமசாமி 93,419 வாக்குகள் பெற்று 18,283 வாக்குகள் வித்தியாசத்தில் காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான மாங்குடி, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜ.க சார்பாக ஹெச்.ராஜாவும், அ.ம.மு.க சார்பாக தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மையம் ச.மீ.ராசகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போட்டியிடுவதால் பாராளுமன்றத் தேர்தல் போல் காரைக்குடி சட்டமன்ற தொகுதி காட்சியளிக்கிறது. மாங்குடி, ஹெச்.ராஜா, தேர்போகி பாண்டி ஆகிய மூவரும் களத்தில் பலமாக இருப்பதால் காரைக்குடியில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதிக்கு தனது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், `` காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திட நடவடிக்கை, காரைக்குடிக்கு சட்டக் கல்லூரி, இளைஞர்கள் மேம்பாட்டுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி வகுப்புகள்” என பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அதில் 16-வதாக இடம் பெற்றுள்ள அறிக்கையில் `செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்படும்’ என்ற வாக்குறுதி இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு ஏற்கெனவே 2019-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கைத்தறி கூட்டுறவு சங்கம் புவிசார் குறியீடு பெற்றுவிட்டதால், ஹெச்.ராஜாவின் இந்த தேர்தல் அறிக்கை விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது

புவிசார் குறியீடு பெற்றுத் தருவதாக ஹெச்.ராஜா கொடுத்திருக்கும் வாக்குறுதி

இது குறித்து ராஜீவ் காந்தி கைத்தறி கூட்டுறவு சங்கத் தலைவர் பழனியப்பன் நம்மிடம் பேசும்போது, `` காரைக்குடி கண்டாங்கி சேலை பாரம்பரியமானது. இங்கு தயார் செய்யப்படும் சேலைகளை வெளிநாட்டவரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மெச்சும் அளவிற்கு தரமான கண்டாங்கி சேலைகளை நியாயமான விலைக்கு கொடுத்து வருகிறோம். பெருமை போற்றும் செட்டிநாடு கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த 2014-ல் முயற்சி எடுக்க ஆரம்பித்தோம். 2015-ல் இந்திய ஹேண்ட் லூம் பிராண்ட் பெற்றோம். மேற்படி விசாரணை மற்றும் சோதனைகள் டெல்லியில் நடைபெற்றது. பல கட்ட முயற்சிக்கு பின் 2019-ல் புவிசார் குறியீடு கிடைத்துவிட்டது. அந்த சமயத்தில் அனைத்து ஊடங்களிலும் இந்த செய்தி வெளியானது. ஆனால் இது தெரியாமல் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா மீண்டும் புவிசார் குறியீடு பெற்றுத் தருகிறேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.



from Latest News https://ift.tt/3m753OM

Post a Comment

0 Comments