60 வயதுக்கு மேற்பட்டவர்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணைநோய்கள் உள்ளவர்களும் கோவிட் தடுப்பூசி எடுத்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் பலர் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்குபவர்களுக்கும் எடுத்துக்கொண்டவர்களுக்கும் மருந்து வேலை செய்வது பற்றிய தொடர் சந்தேகங்கள் எழ, தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூரை தொடர்பு கொண்டோம்.
ஏசிம்ப்டமேட்டிக் எனப்படும் அறிகுறிகளற்ற கெரோனா தொற்று உடையவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
அறிகுறிகளற்ற தொற்று தங்களுக்கு இருப்பதாக நினைப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கவே தேவை இல்லை. தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே செய்யும். கோவிட் உறுதி செய்யப்பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலருக்கு காய்ச்சல், தலைவலி, உடம்புவலி போன்ற அறிகுறிகள் வருகின்றன. சிலருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. அறிகுறிகள் வரவில்லை என்றால் உடம்பில் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?
கோவிட் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும்போது அதை உடம்பு ஏற்றுக்கொள்வதன் வெளிப்பாடே காய்ச்சல், உடம்புவலி, தலைவலி போன்ற அறிகுறிகள். இந்த அறிகுறிகள் வரவில்லை என்றால் உடம்பில் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தம் கிடையாது. கோபம் வந்தால் சிலர் ஆத்திரப்படுவார்கள் சிலர் அமைதியாக கடப்பார்கள். அதைப் போலவே தான் உடலும் வேலை செய்கிறது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் வெளிப்பட, மருந்து உடலில் வேலை செய்வதைத் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், சிலருக்கு அறிகுறிகள் அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதனால் உடலில் மருந்து வேலைசெய்யவில்லை என எண்ணுவது தவறு.
2 டோசேஜ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா நோய்த் தொற்று வருகிறதே. ஏன்?
தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கோவிட் நோய் வரவே வராது என்று கிடையாது. நிச்சயம் வரலாம். ஆனால், அதற்கான சாத்தியங்கள் தடுப்பூசி எடுப்பதற்கு முன் இருப்பதை விட குறைவாகவே இருக்கும். அதைப்போல, கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டவர் ஏற்கெனவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவராக இருந்தால் நோய் தாக்கத்தின் வீரியம் குறைவாக இருக்கும். அதனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மிக சரியான ஒன்று.
from Latest News https://ift.tt/3cDMnTW
0 Comments