https://gumlet.assettype.com/vikatan/2019-05/eea7fcd0-dd83-4dd7-a24c-0dbe0d8e317a/146843_thumb.jpgவன்னியரசு: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் ஒன்று வானூர் (தனி) தொகுதி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு போட்டியிட்ட இத்தொகுதியில் 1962 முதல் 2016 வரையிலான தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிய இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்ரபாணி 64,167 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மைதிலி 53,944 வாக்குகளைப் பெற்றிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 23,873 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த நிலையில், இத்தொகுதியை கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது திமுக.

வன்னியரசு

விடுதலை சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு களமிறங்கிய நிலையில், அவரை எதிர்த்து மீண்டும் அதிமுக சார்பில் சக்ரபாணியும், அமமுக கூட்டணி சார்பில் பி.எம்.கணபதியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் மு.லட்சுமியும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். தொடர்ந்து கடந்த நான்கு தேர்தல்களில் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுவந்த நிலையில், இந்த முறை அதிமுக வாக்குகளை அமமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் கணபதி பிரிப்பார் எனக் கூறப்பட்டது. ஏனெனில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கணபதி 1,25,000 வாக்குகளைப் பெற்றிருந்தார். எனவே, அதிமுகவுக்கு இது பாதகமான அம்சமாகவே பார்க்கப்பட்டது. அதே சமயம் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வாக்குகள் இணைவது வன்னியரசுக்கான சாதகமான அம்சமாக இருந்தாலும், வன்னியரசுக்கும் சக்ரபாணிக்கும் இடையேதான் போட்டி கடுமையாக காணப்படுகிறது.



from Latest News https://ift.tt/3eG5yfA

Post a Comment

0 Comments