தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராகப் பதவியேற்க முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுவதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதோடு, அந்தப் பதவியை வகிப்பதற்கான தகுதி அவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது தவறு என்று கூறும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இந்நிலையில், தெற்கு மண்டல நிபுணத்துவ உறுப்பினராகப் பதவி ஏற்கவிருந்த கிரிஜா வைத்தியநாதன், கடந்த ஏப்ரல் 19-ம் தேதியன்று தான் அந்தப் பதவியை ஏற்கப் போவதில்லை என்று கூறி மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக கே.சத்யகோபால், பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல நிபுணத்துவ உறுப்பினராக நியமித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
from Latest News https://ift.tt/32ZziP6
0 Comments