https://gumlet.assettype.com/vikatan/2020-02/cea605df-9f81-404c-bd30-76fd76eb02f5/simbu_4.jpg''அருமையான கதை சொன்னார் கே.வி.ஆனந்த்... அடுத்து அவரோடு படம் பண்ண இருந்தேன்” - கலங்கும் சிம்பு

தமிழ்த் திரையுலகம் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இழப்புகளைச் சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத திரையுலகம், இன்று இயக்குநர் கே.வி.ஆனந்தை இழந்திருக்கிறது. கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், பிரபலங்கள் அதற்குத் தொடர்ச்சியாகப் பலியாவது திரைத்துறையினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்துடனான நினைவுகளைப் பலரும் பகிர்ந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

“ஒளிப்பதிவாளர்களில் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர்; நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்” என்று நடிகர் சிம்பு தான் வெளியிட்டிருக்கும் அஞ்சலிக் குறிப்பில் கூறியிருக்கிறார்.
சிம்பு

மேலும், “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி. ஆனந்த் அவர்கள். 'கோ' படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகிவிட்டது” என்றும் அஞ்சலிக் குறிப்பில் சிம்பு குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: கொரோனா தொற்றால் மாரடைப்பா… கே.வி.ஆனந்த் மரணத்துக்குக் காரணம் என்ன?

“சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்” என்ற தகவலைச் சிம்பு வெளியிட்டிருப்பது, கே.வி.ஆனந்தின் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

“ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர்; நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்... அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு” என்று சிம்பு தன்னுடைய அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/3aSveEx

Post a Comment

0 Comments