https://gumlet.assettype.com/vikatan/2021-03/d1153ef9-f068-4d35-8f1c-10d86db03240/tahng.jpgதங்க தமிழ்ச்செல்வன்: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

மூன்று முறை எம்.எல்.ஏ, ஒரு முறை ராஜ்யசபா எம்.பி., 12 வருடம் அதிமுக.மாவட்டச் செயலாளர் என அதிகாரம் செலுத்திவந்த தங்க.தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு 2001, 2011, 2016-ம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அதற்குப் பின் இத்தொகுதியில் இவரது செல்வாக்கு உயர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் டிடிவி தினகரன் அணிக்குச் சென்றதால் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

பின்னர் அமமுக சார்பில், 2019 நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதற்குப் பின் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் திமுகவில் சேர்ந்த தங்க.தமிழ்ச்செல்வனுக்கு மாநில அளவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தங்க தமிழ்ச்செல்வன்

தேனி வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள தங்க.தமிழ்ச்செல்வன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, சொந்தத் தொகுதியான ஆண்டிபட்டியை விட்டுவிட்டு, போடி தொகுதியில் களமிறங்கினார். போடி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ஆறு முறை அதிமுகவும், மூன்று முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 2011, 2016 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் போடி தொகுதியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முக்குலத்தோர் சமூக வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் உள்ளன. இந்த வாக்குகளை பெருமளவில் அதிமுக தன் வசம் வைத்திருந்தது. ஆனால் சசிகலா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த வாக்குகள் அமமுகவால் சிதறடிக்கப்பட்டது. கூடவே தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு இந்தப் பகுதியில் ஏற்கெனவே இருந்த மக்கள் செல்வாக்கும், திமுகவின் வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்றே கருதப்பட்டது.



from Latest News https://ift.tt/3aNLSoU

Post a Comment

0 Comments