https://gumlet.assettype.com/vikatan/2021-04/ab8736a1-305b-4821-bd9a-3efb89bb3ae3/h_raja.jpgஹெச்.ராஜா: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை மீண்டும் முதுகில் சுமந்தபடி..' எனச் சொல்லத்தக்க வகையில், தேர்தலில் எத்தனை முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும், மனம் தளராது மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர் பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா. 2001-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றது. அப்போது, காரைக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தவிர அவர் போட்டியிட்ட மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவர் தோல்வியையே தழுவியிருக்கிறார்.1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்  தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2014 ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். 2019-ம் ஆண்டும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இதிலிருந்தே இந்த மாவட்டத்திலும், காரைக்குடி தொகுதியிலும் பாஜகவுக்கு உள்ள செல்வாக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஹெச்.ராஜா

ஆனாலும், இந்த சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க வாக்குகளை நம்பி மீண்டும் களமிறங்கி உள்ளார். ஆனால், அவ்வப்போது எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, தீவிர இந்துத்துவாதியாக தன்னைக் காட்டிக் கொள்வது, சொந்த கட்சியினரிடத்தில் மட்டுமல்லாது கூட்டணி கட்சியினரிடத்திலும் அதிகார தொனியில் நடந்து கொள்வது போன்ற நெகட்டிவ் சமாசாரங்களே ஹெச்.ராஜாவுக்குப் பாதகமான அம்சங்களாக இருந்தன. இத்தொகுதியில் கடந்த 1952 முதல் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க தலா 4 முறையும், தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள சில தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதால், இந்த முறை ராஜாவுக்கு திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி கடுமையான நெருக்கடியைக் கொடுத்தார். இன்னொருபுறம் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தெற்போகி பாண்டி அ.தி.மு.க வாக்குகளை கணிசமான அளவுக்குப் பிரிப்பார் என்ற பேச்சும், மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தியும் பிரசாரக் களத்தில் ராஜாவுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்தி இருந்தது.



from Latest News https://ift.tt/2QLHGyW

Post a Comment

0 Comments