இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருப்பதால், தங்கள் உயிரை பணையம் வைக்க விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பணவசதி படைத்த பலரும் தனி விமானங்களை இதற்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த இருபது நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் காரணமாக மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் உயிர்விடும் பரிதாபங்கள் தினமும் நடந்துவருகிறது. குறிப்பாக மும்பை, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிக வசதிபடைத்த மருத்துவமனைகளில் கூட கொரோனா நோயாளிகளுக்கு இடம்கிடைக்காத நிலையும் உள்ளது.
ஒருவேளை, மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பெரும்பாலான மருத்துவமனைகளில் இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்களின் குடும்பத்தினருக்கே, மருத்துமவனைகளில் இடம்கிடைக்காமல் திண்டாடியிருக்கிறார்கள்.
அதே போல்,தொழிலதிபர்களை அதிகம் கொண்ட குஜராத் மாநிலத்தில் உள்ள பல கார்ப்ரேட் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலை என சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சுகாதார பேரிடரில் சிக்கிக்கொள்வதை தவிர்க வசதி படைத்த பலரும் இந்தியாவை விட்டு வெளியேறிவருவதாக பிரபல பொருளாதார பத்திரிக்கை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலரும் தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் இருப்பது தங்களுக்கு சிக்கலாகிவிடும் என்பதால், தனியார் விமான நிறுவனங்களை அணுகி மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகிவருகிறார்களாம். இதற்காக பிரபல டிராவல்ஸ் ஏஜெண்ட்கள் மூலம் புக் செய்துவருகிறார்கள். நடிகர்கள் ஒருபுறம் பயணமாவதை போலவே குஜராத், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள சில முக்கிய தொழில் அதிபர்களும், தனியார் விமான நிறுவனங்களிடம் சிறிய ரக விமானங்களை வாடைக்கு எடுத்திருக்கின்றனர். இந்தியாவில் பொதுப்பயன்பாட்டு விமானங்களுக்கு பல நாடுகள் தற்போது தடை விதித்துவருகின்றன. தனி விமானத்தை பயன்படுத்தும்போது, இதுபோன்ற சிக்கல்கள் குறைவு என்பதால் தனியாக விமானங்களை வாடைக்கு எடுக்க விரும்புகின்றனர்.
தொழிலதிபர்கள் பலர் துபாய், லண்டன், ஹாங்காங், உள்ளிட்ட நாடுகளை தேர்ந்தெடுத்த அங்கு பயணமாகி வருகிறார்கள். இதனால் கடந்த ஒருவாரத்தில் மட்டும் தனி விமானங்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு தொடர் புக்கிங்குகள் வந்துள்ளன. துபாய் நாட்டுக்கு தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ள பத்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யபடுகிறது. சில விமானங்களில் இந்த தொகை கூடுதலாகவும் இருக்கிறது.

அதே நேரம் லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டுமானால், சாதாரண விமானங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை போன்று பத்து மடங்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால்,பண வசதி படைத்த பலரும் இந்த தொகையை ஒரு பொருட்டாகக் கருதாமல் வெளிநாடுகளுக்கு பறந்துவருகிறார்கள்!
from Latest News https://ift.tt/2QxuPR9
0 Comments