https://gumlet.assettype.com/vikatan/2021-04/db37d828-ca9a-4787-b870-26b786fbf41f/annamalai_inspection_2.jpgகரூர்: `பாஜக-வுக்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி; சட்டப் பேரவைக்குள் நுழைவோம்!' - அண்ணாமலை

பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை , அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்சி.சி.டி.வி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சி.சி.டி.வி கண்காணிப்பு அறை ஆகியவற்றை ஏப்ரல் 28 - ம் தேதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்யும் அண்ணாமலை

Also Read: `தமிழகத்துக்கான ஆக்ஸிஜனை யாரைக் கேட்டு பிற மாநிலங்களுக்குக் கொடுத்தீர்கள்?'-மோடிக்கு ஜோதிமணி கேள்வி

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், நியாயமாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் 2 - ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது நடந்துக்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவற்றை முழுமையாகக் கடைபிடிப்போம். அவர்களுக்கு 100 சதவீதத்திற்கு மேல் ஒத்துழைப்பு அளிப்போம்.அதேபோல், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள உத்தரவுகள் படி, அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைபிடிப்போம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 - ம் தேதி, கெரோனா பெரிதாகப் பரவாமல் இருக்க ஏதுவாக, தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஆய்வு செய்யும் அண்ணாமலை

தேர்தல் வெற்றியை பொறுத்தவரையில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி மட்டுமின்றி, கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.கவே ஆட்சி அமைக்கும். எனது கருத்துப்படி, அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல், 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்று, சட்டப் பேரவைக்குள் நுழைவோம். கடந்த 2016 - ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவறான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பெண்களுடைய ஆதரவு தமிழ்நாடு அரசுக்கு அதிக அளவில் இருப்பதையே வாக்குப்பதிவு விழுக்காடு காட்டுகிறது. மத்திய அரசு பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கிவருகிறது. மாநில அரசும் இலவசமாக வழங்கி வருவதால், தடுப்பூசி விலையேற்றம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. 18 வயது நிரம்பியவர்களுக்குத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் இணைந்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

ஆய்வு செய்யும் அண்ணாமலை

அரசு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் நிலையை மக்கள் ஏற்படுத்திவிடக்கூடாது. கொரோனா 2 வது அலை, கடந்த 6 - ம் தேதி நடைபெற்ற தேர்தல் வரை பெரியளவில் இல்லை. அதன் பின்பே கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ளது. வரும் மே 1 - ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. அனைவரும் தயங்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள். தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 0.04 பேருக்கு, அதாவது 10,000 பேரில் 4 பேர் என்ற அளவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதனால், ஊசி போடுவதில் அரசியல் வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்னை முழுமையாக விலகிய பிறகு, அரசியலை வைத்துக் கொள்வோம்" என கேட்டுக்கொண்டார்.



from Latest News https://ift.tt/2R8HklU

Post a Comment

0 Comments