https://ift.tt/2QFqTh8 Election 2021 | தமிழக தேர்தல் 2021 - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்... எப்போது?

5 முனை போட்டியாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் , அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தனர்.டி.டி.வி தினகரன், ( அமமுக ) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர். அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமாக உட்பட மொத்தம் 10 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்திருக்கின்றன. திமுக-காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக, விசிக,கம்யூனிஸ்ட் என மொத்தமாக 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளன. இரண்டு பிரதான கட்சிகள் தவிர, டிடிவி தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சமக, ஐஜேகே என மொத்தமாக 12 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருக்கின்றன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,998. இதில் 3,585 பேர் ஆண்களும், 411 பேர் பெண்களும் மற்றுமுள்ள 2 பேர் மூன்றாம்பாலினத்தவர்களும் ஆவார்கள். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், மீதம் உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குப்திவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்று 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு 7 மணிக்கு மேல் வெளியாகும். அதாவது, மேற்கு வங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர். .

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.



from Latest News https://ift.tt/2Ra6wsp

Post a Comment

0 Comments