தன் அதிரடியான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறட்டித்து 75 ரன்கள் குவித்திருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட். அவரும் டூப்ளெஸ்ஸியும் அட்டகாசமான தொடக்கம் கொடுக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. மிகவும் நேர்த்தியாக ஆடும் கெய்க்வாட் பேட்டிங்கை அனைவரும் சிலாகிக்கிறார்கள். ஆனால், அவர் பலம் அதுமட்டுமில்லை. அதைவிட ஒரு முக்கியமான அம்சம்தான் அவரது இந்த அசத்தல் பேட்டிங்குக்குக் காரணம். அது என்ன? இந்த வீடியோவில் காணுங்கள்.
44 பந்துகளில் 75 ரன்கள் அடித்திருக்கும் கெய்க்வாட் 12 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். ஜெகதீசா சுசித் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தது. ரஷீத் கானின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தது என மிரட்டியெடுத்தார். அதேசமயம் பவர்பிளேவில் ஃபாஃப் டூப்ளெஸ்ஸி அதிரடி காட்டும்போது சிங்கிள் எடுத்து ஸ்டிரைக் ரொடேட் செய்யவும் அவர் தவறவில்லை. தேர்ட் மேன், கவர், ஃபைன் லெக், மிட்விக்கெட் என அனைத்து திசையிலும் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இப்போது ஆடிவரும் இளைஞர்கள் பலரின் ஃபூட்வொர்க்கையும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அந்த விஷயத்தில் அவர்களிடம் நற்பெயர் வாங்கிவிட்டார் கெய்க்வாட். ஃப்ரன்ட் ஃபூட், பேக்ஃபூட் என இரண்டையும் சிறப்பாக ஆடுகிறார். டெக்னிக்கலாகவும் சரி, ஆட்ட நேர்த்தியிலும் சரி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிடுகிறார். ஆனால், அவரின் மிகப்பெரிய பலம் அதுவா என்றால், நிச்சயம் இல்லை. இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்ன, இந்த வீடியோவில் காணுங்கள்.
from Latest News https://ift.tt/2PyhNSR
0 Comments