https://ift.tt/3vygZwF 2021 | 5 மாநில தேர்தல் 2021 - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்... எப்போது?

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆக மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநில தேர்தல்களும் இந்த முறை அதிக கவனம் ஈர்த்தது. கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்கம் கடத்தல் விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல். புதுச்சேரியில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், மம்தாவை எப்படியாவது வீழ்த்தி, ஆட்சிய பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க.

மம்தா பானர்ஜி

இப்படி அனைத்து மாநில தேர்தல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் மே மாதம் 2 -ம் தேதி ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனிடையே இன்று மேற்கு வங்கத்தில், 8வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் முடிவுகள் வெளியாகும். அதாவது இரவு 7 மணிக்கு மேல், இந்த முடிவுகள் வெளியாகும்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



from Latest News https://ift.tt/3e1je5C

Post a Comment

0 Comments