https://gumlet.assettype.com/vikatan/2021-05/d1b6e6e5-b7da-4fa9-92f0-cd91b584181c/WhatsApp_Image_2021_05_31_at_2_17_01_PM.jpegகோவிட் 19: ஒரே மாதத்தில் 8,000 சிறார்களுக்கு தொற்று; 3-வது அலைக்குத் தயாராகும் மகாராஷ்டிரா!

கொரோனா மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தற்போது மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 8,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சாங்கிலி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

COVID-19 screening in Mumbai

இதில் தற்போது 5 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வரும் நாள்களில் குழந்தைகளுக்கு தொற்று அதிகரிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சாங்கிலி கவுன்சிலர் அபிஜித் போஸ்லே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ``கொரோனா மூன்றாவது அலை பரவினால் அதனை எதிர்கொள்ள வசதியாக குழந்தைகள் வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பது போன்று உணராமல் பள்ளி அல்லது நர்சரியில் இருப்பது போன்ற உணர்வுடன் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

அகமத்நகர் மாவட்டத்தில் மே மாதத்தில் மட்டும் 8,000 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது மாவட்ட நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது. இதற்காக குழந்தைகள் சிகிச்சை நிபுணர்களை கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்படுத்தி வருகிறது.

இது குறித்து எம்.எல்.ஏ.ஜெக்தாக் கூறுகையில், ``இரண்டாவது அலையின்போது படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே மூன்றாவது அலையில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கவேண்டும். அதற்குத் தக்கபடி நாம் முழுமையாக தயாராக வேண்டும்" என்றார்.

கொரோனா மூன்றாவது அலை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இடையில் இருக்கும் இரண்டு மாதங்களில் அதனை எதிர்கொள்ள மாநில அரசு தயாராகிக்கொள்ள திட்டமிட்டுள்ளது. எந்த நோயாக இருந்தாலும் முதலில் தாக்குவது மகாராஷ்டிராவாகத்தான் இருக்கிறது. எனவே மாநில சுகாதாரத்துறை இதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்று மத்திய அரசு அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.

Vaccine

இதற்கிடையே வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுவும் மும்பையில் வசிக்கக்கூடியவர்கள் மட்டுமே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளிநாடுகளில் படிக்கச் செல்லவேண்டும் என்பதால் இரண்டாவது தடுப்பூசிக்கு 84 நாள்கள் இடைவெளி தேவை என்ற விதியைத் தளர்த்தவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from Latest News https://ift.tt/3wHXimA

Post a Comment

0 Comments