கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், தொழிலாளர்களின் கவலையைப் போக்க, இ.எஸ்.ஐ.சி. மற்றும் இ.பி.எஃப்.ஒ. திட்டங்கள் மூலம் கூடுதல் பலன்களை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிறுவனங்களின் செலவினங்களை அதிகரிக்காமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும் கூடுதல் சலுகைகளை வழங்க தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ). மாதம் ரூ.21,000 மற்றும் அதற்கு குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இதில் சந்தா செலுத்தி உறுப்பினராகும்பட்சத்தில் அவசர காலங்களில் அவரோ, அவரது குடும்பத்தினரோ இ.எஸ்.ஐ மருத்துவமனை அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
ஓய்வூதியம் வழங்கப்படும்!
இ.எஸ்.ஐ-யில் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஆனால், அந்த ஊழியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும்.

Also Read: நிதியமைச்சரின் பி.எஃப்., இ.எஸ்.ஐ அறிவிப்புகள், சிறு குறு நிறுவனங்களுக்குப் பயனளிக்குமா? ஓர் அலசல்!
மேலும் அவர், இ.எஸ்.ஐ கணக்கில் குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு வரவு வைத்திருக்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும் என தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல, கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கழகம் (இ.பி.எப்.ஒ.) செயல்படுத்தி வரும் வைப்புத்தொகை சார்ந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச தொகையானது ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவாகப் படிக்க நினைப்பவர்கள் இந்த லிங்க்கினைசொடுக்கவும்: https://www.vikatan.com/business/news/epfo-provides-7-lakh-rupees-death-insurance-cover-to-its-members
from Latest News https://ift.tt/3vBsPqg
0 Comments