https://gumlet.assettype.com/vikatan/2021-05/1a7832c9-7e9b-41ef-871f-3863992ae873/IMG_20210530_WA0023.jpg`கோவை புறக்கணிக்கப்படவில்லை, எல்லா ஊரும் எங்க ஊர்தான்!' - முதல்வர் ஸ்டாலின்

கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அந்த மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அப்போது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பி.பி.இ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நேரடியாக அவர் நலம் விசாரித்தார். அதன் பிறகு அதிகாரிகளின் ஆலோசனை செய்த மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

மு.க. ஸ்டாலின்

Also Read: மாறுபடும் மத்திய, மாநில அரசுகள் கணக்கு! - தொடரும் கோவை தடுப்பூசி சர்ச்சை

அப்போது அவர், "கர்நாடகா மாநிலம் கொரோனா பாதிப்பில் 50,000 என்ற உச்சத்தை தொட்டது. அதேபோல, கேரளா மாநிலத்தில் 43,000 என்ற உச்சத்தை தொட்டது. தமிழகத்தில் 36,000 என்ற எண்ணிக்கையில் கட்டுக்குள் வைத்துள்ளோம்.

தளர்வுகளற்ற ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அரசு நடவடிக்கைகளால் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு நாள்களாக குறைந்து கொண்டிருக்கிறது. கோவை கொரோனா தடுப்புப் பணிக்கு அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணியை இங்கேயே தங்க சொல்லியுள்ளோம். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனும் அவ்வபோது ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு தனித்தனியே அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். கிராமப்புற கண்காணிப்பு குழுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் 4,009 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. கோவை உட்பட எல்லா இடங்களில் படுக்கை பற்றாகுறை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை கோவையில் 5,85,713 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. புதிய அரசு அமைந்த பின் 1,51,061 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மு.க. ஸ்டாலின்

சென்னைக்கு அடித்தபடியாக கோவையில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவை மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இதேநிலைதான். அரசும், மக்களும் சேர்ந்தால் எந்த நோயையும் வெல்ல முடியும்.

கொரோனா பணிகளில் கோவை புறக்கணிகப்பட்டதாக சிலர் சொல்கின்றனர். அவர்களுக்கு நான் அரசியல் ரீதியாக பதில் அளிக்க விரும்பவில்லை. அவர்கள் இந்த அரசு ஏற்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட வேண்டும். கோவை புறக்கணிக்கப்படவில்லை. ஓட்டுபோட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்ந்தே வேலை பார்க்கின்றோம்.

மு.க ஸ்டாலின்

ஓட்டுப்போடாத மக்களும், இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் வகையில் எங்கள் பணி இருக்கும். எல்லா ஊரும் எங்க ஊர்தான். இதில் எந்த பாரபட்சமும் கிடையாது. தமிழகத்தை பாதுகாப்பதுதான் எங்கள் முதல் வேலை” என்றார்.



from Latest News https://ift.tt/2SEsSCY

Post a Comment

0 Comments