https://gumlet.assettype.com/vikatan/2021-05/ec04be02-d9ed-4964-8551-9acc841911f8/pinarayi1.jpg`சங்பரிவாரின் அஜண்டாவை பின்வாசல் வழியாக திணிக்கிறார்கள்' -லட்சத்தீவுக்காக கேரள சட்டசபையில் தீர்மானம்

லட்சத்தீவில் புதிதாக நியமிக்கப்பட்ட அட்மினிஸ்டேட்டர் பிரஃபுல் பட்டேல் சில புதிய சட்டங்களை கொண்டுவந்துள்ளார். அதில், மாட்டுக்கறிக்கு தடை, மீன் பிடி கூடாரங்கள் அகற்றம், மாவட்ட பஞ்சாயத்துக்கான அதிகாரம் குறைப்பு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பது போன்ற சட்டங்களும் அடக்கம்.

மேலும் லட்சத்தீவு ஏற்கனவே பயன்படுத்தி வந்த கேரள மாநிலத்தின் பேப்பூர் துறைமுகத்துக்கு பதிலாக கர்நாடகா மாநிலம் மங்களூர் துறைமுகத்தை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 96 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் லட்சத்தீவை மோடியின் நண்பரான பிரஃபுல் பட்டேல் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க புதிய சட்டங்களை கொண்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் லட்சத்தீவு குறித்து கேரள மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பினராயி விஜயன்

லட்சத்தீவு குறித்த தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்த பினராயி விஜயன் பேசுகையில், "லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி, காவி அஜண்டாவும், கார்ப்பரேட்டுகளின் நலன்களையும் திணிக்கும் முயற்சியும் இப்போது அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தென்னை மரங்களில் காவி பூசுவதில் ஆரம்பித்து, மக்களின் வாழ்விடங்களையும், வாழ்க்கை முறையையும், இயற்கை பந்தங்களையும் அழிக்கும் வகையில் வளர்ந்துள்ளது" என்றார்.

சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், "குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்த பதாகைகளை எழுதியவர் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் லட்சத்தீவில் நடந்துள்ளது. அமைதியான வாழ்க்கை முறையும், விருந்தினர்களை அன்பாக உபசரிக்கும் குணமும் கொண்டவர்கள் லட்சத்தீவு மக்கள். குற்றங்கள் குறைவாக உள்ள லட்சத்தீவில் குண்டர் சட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்

பசு இறைச்சிக்கு தடை விதித்து, பசுவதை தடை என்ற சங்கபரிவாரின் அஜண்டாவை பின்வாசல் வழியாக திணிக்கிறார்கள். 1956 நவம்பர் 1-ம் தேதிவரை லட்சத்தீவு மலபார் மாவட்டத்தின் அங்கமாக இருந்தது. வாழ்க்கை முறையிலும், கலாசாரத்திலும் லட்சத்தீவும் கேரளத்துடன் ஒன்றியுள்ளது. லட்சத்தீவின் பிரதான மொழியாக மலையாளம் உள்ளது.

கார்ப்பரேட் நலனும்கும், இந்துத்துவா அரசியலுக்கு ஒரு மக்களை அடிமைப்படுத்தும் செயலை கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். லட்சத்தீவு மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்தீவு

இதுகுறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் கேள்வி எழுப்புகிறார். மத்திய அரசின் கீழ் வரும் ஒரு பகுதி குறித்து கேரள அரசு எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும். கேரளத்திற்கு சம்பந்தம் இல்லாத இடம் குறித்து கேரளம் தீர்மானம் நிறைவேற்றி புனிதமான சட்டசபையை பரிகாசமாக்கியுள்ளனர். சட்டசபை அதன் பொறுப்பை விட்டு மாறியுள்ளது. கேரள மக்களுக்கான சட்டத்தை கொண்டுவராமல், மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவருவதற்காக சட்டசபையை பயன்படுத்துகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக சட்டசபையை பயன்படுத்துகிறார்கள். இதற்கு முன்பு லச்சத்தீவு அட்மினிஸ்டேட்டருக்கு எதிராக பேசினார்கள். இப்போது மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது அரசியல் ஆதாயத்துக்கான தீர்மானம்" என்றார்.



from Latest News https://ift.tt/3uw6gSx

Post a Comment

0 Comments