https://gumlet.assettype.com/vikatan/2021-05/ec768b00-bb96-4957-877a-ef05ae504c70/AP21148637631574.jpg`கனட வரலாற்றின் இருண்ட பக்கங்கள்’... பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்! - அதிர்ச்சி

கனடாவில் பழங்குடியினர் உறைவிட பள்ளியில் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று வயதிற்கும் கீழான குழந்தைகள் உடலும் அங்கு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள, பல பழங்குடியின சமூகத்தில் இருந்து, குழந்தைகள் அப்பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டிக்கிறார்கள். வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்ட குழந்தைகள் இன அழிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. `கனட வரலாற்றின் மிக இருண்ட பக்கங்கள் திறக்கப்படுள்ளது’ என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வெள்ளிகிழமை மனம் உடைந்து கூறினார்.

``கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி எனப்படும் மிகப்பெரிய பழங்குடியின குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடி மக்களுடைய சடலங்கள் தான்” என Tk'emlúps te Secwépemc பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் உறுதிபடுத்தியுள்ளார். தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் உடல்களை கண்டுபிடித்த அவர், இன்னும் மைதானத்தில் தேடல் முடியவில்லை என கூறினார்.

மேலும் கசிமிர், ``கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015-ம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுள் 6,000-க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர். இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது. 1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும்” என கூறப்படுகிறது. 1990-களில் தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டன.

கனட சட்டமன்ற தலைவர் பெர்ரி பெல்லக்ராட், “பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது” என கூறினார்.

கனடா மட்டும் இன்றி உலகின் பல அரசுகள் பழங்குடியின மக்களை துன்பப்படுத்தி உள்ளன. உலகம் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைத்த பொழுதுகளில் எல்லாம் மனிதம் மறக்கப்பட்டு வன்முறைகள் பெருகின என்பது மறுக்க முடியாத உண்மை. கனட குழந்தைகள் தங்கள் மொழியை பேசவும் தங்கள் கலாசாரத்தை பின்பற்றவும் கூடாது என கருதிய ஆதிக்கவாதிகளின் இன வெறி கனட வரலாற்றில் துடைத்தெறிய முடியாத கறையாக பதிந்திருக்கும். காலத்தின் ஓட்டத்தில் மனித இனம் எத்தனை மாற்றம் அடைந்தாலும் மனிதாபிமானம் இல்லாமல் கொல்லப்பட்ட உயிர்கள் வரலாறாக நம்மை துரத்தும்!



from Latest News https://ift.tt/3fB1yPb

Post a Comment

0 Comments