https://gumlet.assettype.com/vikatan/2021-05/3cb85410-b92c-43b5-9cd8-164ad51377a6/medical_college.jpg'அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; குறைந்த எண்ணிக்கையில் படுக்கை வசதி!’ - கரூர் மாவட்ட நிலவரம்!

பரப்பளவில் சிறிய மாவட்டமான கரூரில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 'மக்களில் சிலர் அரசு சொல்லும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விசயங்களை கடைப்பிடிக்காததால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு அதிகரித்து வருகிறது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கரூர் மருத்துவக் கல்லூரி

Also Read: கரூர்: 'எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை!' - செந்தில் பாலாஜி

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையைத் தாண்டி கோயமுத்தூர், நாமக்கல் என்று பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பரப்பளவில் சிறிய மாவட்டமான கரூரில், கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், தற்போது மே நான்காவது வாரத்தின் இறுதியில் கோரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் மே மாதத்தின் முதல் வாரத்தில், 175 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால், நேற்று மே 30 - ஆம் தேதி கணக்குப்படி 488 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் 18 இடங்களில் 850 படுக்கைகளும், கரூரில் உள்ள 21 தனியார் மருத்துவமனைகளில் 473 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையத்தில் தனிமைப்படுத்தபட 17 மையங்களில் 717 படுக்கை வசதிகளும் என மொத்தம் கரூர் மாவட்டத்தில் 2,040 கொரோனா படுக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால், கொரோனாவால் கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000 கடந்துள்ள சூழ்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் மருத்துவக் கல்லூரி

கொரோனா பாதிப்பு மே மாதத்தில் மட்டும் கரூர் மாவட்ட பாதிப்பு விவரம்: முதல் வார இறுதியில் 1,822 பேரும், இரண்டாம் வார இறுதியில் 1,897 பேரும், மூன்றாம் வார இறுதியில் 2,142 பேரும், நான்காவது வார இறுதியில் 3,231 பேரும் பாதிப்பட்டனர். மேற்கண்ட புள்ளிவிவரத்தின்படி, 4 வது வாரத்தின் இறுதியில் கொரோனா இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அப்படி, நடப்பு மாதத்தில் மட்டும் 9,387 பேருக்கு தொற்று கண்டறிய்யபட்டுள்ளது. அதேபோல, மே மாதத் துவக்கத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 58 ஆக இருந்தது. மொத்தமாக, மே மாதத்தில் மட்டும் கொரோனாவுக்கு 140 பேர் உயிரிழந்ததால் தற்போது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இதுவரை 2,92,075 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 16,732 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதில், 12,996 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதனிடயே, நேற்று மாலை புதிதாக 488 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,539 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கரூர் புகளூரில் இயங்கி வரும் டி.என்.பி.எல்லில், 152 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடனும், 48 படுக்கைகள் ஆக்ஸிஜன் இல்லாமலும் அமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் இன்று வீடியோ கான்ஃப்ரென்ஸ் முறையில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், படுக்கை வசதி கொஞ்சம் கூடினாலும், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், "சிறிய மாவட்டமாக இருந்தாலும் மக்களில் சிலர் தேவையில்லாமல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுகிறார்கள். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, சானிடைஸரை பயன்படுத்துவது என்று எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அதனாலேயே, பாதிப்பு அதிகமாகி வருகிறது. மக்களும் நிலைமை உணர்ந்து பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.



from Latest News https://ift.tt/3uCgSPB

Post a Comment

0 Comments