https://gumlet.assettype.com/vikatan/2020-08/c9c02cc7-6982-4915-9966-288c059ee513/p42d.jpgமும்பை: கல்லூரி ஆன்லைன் வகுப்பு; ஆபாச வீடியோவை பதிவேற்றிய மர்ம நபர்?! - விசாரணையில் சைபர் பிரிவு

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் ஆன்லைனில் வகுப்பு நடத்துகின்றனர். இதனால் மாணவர்கள் எப்போதும் மொபைல் போனுடனே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் எப்போது பள்ளி திறக்கும் என்று கேட்டு தொந்தரவு செய்யும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் ஆன்லைனில் கிளாஸ் நடத்திக்கொண்டிருந்த போது மர்ம நபர் உள்ளே நுழைந்து ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். விலே பார்லேயில் உள்ள கல்லூரி ஒன்றின் சார்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தனர். அந்நேரம் திடீரென ஆன்லைனில் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆன்லைன் வகுப்பு

அனைவரும் ஆன்லைன் வகுப்பை பாதியில் நிறுத்தினர். இது எப்படி நடந்தது என்று மாணவர்கள் மத்தியில் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக பின்னர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம நபர் ஆன்லைன் வகுப்புக்குள் லிங்க் மூலம் நுழைந்தாரா அல்லது ஆன்லைன் வகுப்பை ஹேக் செய்து உள்ளே நுழைந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அனைத்து கல்லூரியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை சைபர் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். ஆபாச வீடியோ எந்த ஐபி முகவரியில் இருந்து அனுப்பபட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்த கல்லூரி ஒன்றின் ஆன்லைன் வகுப்புக்குள் நுழைந்த 15 வயது சிறுவன், பெண் பயிற்சியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்தானை சேர்ந்த அந்த சிறுவனை கைது செய்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த சிறுவன் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலி நம்பர் மற்றும் போலி இமெயில் ஐடியை பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் 15 வயது சிறுவன் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

ஆன்லைன் வகுப்பு

இதனால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் லிங்க்களை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களது போனையும் தெரியாதவர்களிடம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இச்சம்பவங்களால் மாணவிகள் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



from Latest News https://ift.tt/2ThhFJg

Post a Comment

0 Comments