இன்றைய பஞ்சாங்கம்
30. 6. 21 ஆனி 16 புதன்கிழமை
திதி: சஷ்டி மாலை 6.06 வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூரட்டாதி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.45 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு
வீட்டில் அமைதியில்லாத சூழல் நிலவுகிறதா... இதோ மாற்றம் தரும் எளிய பரிகாரங்கள்!
வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல. அதில் வசிக்கும் மனிதர்களும் உறவுகளும்தான். அவர்களிடையே காணப்படும் பாசமும் பிணைப்பும் தான். அப்படிப்பட்ட உறவுகளின் மகிழ்ச்சிக்காகத்தான் அன்றாடம் ஒவ்வொருவரும் உழைக்கிறார்கள். ஆனால் ஏனோ பல வீடுகளில் அமைதியின்மை காணப்படுகிறது. சண்டையும் சச்சரவும் நிறைந்திருக்கிறது. யாருக்கு யாரும் எதையும் விட்டுக்கொடுப்பதே இல்லை. இந்தப் பிரச்னை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு உறவுகளுக்கிடையே சகிப்புத் தன்மை குறைந்ததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக இன்றைய சூழல். பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள் அடைந்துகிடப்பது, பொருளாதாரப் பிரச்னைகள், ஆரோக்கியம் தொடர்பான அச்சங்கள் இவையே மனிதர்களின் மனதில் பெரும் அச்சத்தை உண்டாக்கி நிலைகுலைய வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் உளவியல் ரீதியான தீர்வுகள் இருந்தாலும் ஆன்மிகமாக சில பரிகாரங்களும் உள்ளன. அது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
மேஷம்:
அனுகூலம் : முயற்சிகள் அனுகூலமாகும். உதவிகளும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு மழை பொழிவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை தேவை. - ஆல் இஸ் வெல்!
ரிஷபம்:
பணவரவு : எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. காரியங்கள் அனுகூலமாக முடியும். மனம் இறைவழிபாட்டில் ஈடுபடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். - என்ஜாய் தி டே!
மிதுனம்
ஆதாயம் : புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். பேச்சில் மட்டும் நிதானம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!
கடகம்
கவனம் : தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பிரச்னைகள் வந்துபோகும். சொற்களில் கவனம் தேவை. இறைவழிபாட்டால் நன்மைகள் ஏற்படும். - டேக் கேர் ப்ளீஸ்!
சிம்மம்:
நன்மை : புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினர்களால் நன்மைகள் அதிகரிக்கும். பணவரவும் உண்டாகும். சகோதர உறவுகளிடம் கனிவான அணுகுமுறை தேவை. - நாள் நல்ல நாள்!
கன்னி:
நிதானம் : நன்மைகள் அதிக அளவில் நடைபெறும் நாள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். - கேர் ஃபுல் ப்ளீஸ்!
துலாம்:
கடன் : இன்று கடன் பிரச்னைகளை முறையாக அணுக வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. சிக்கனம் தேவை. பொறுமை அவசியம். - இதுவும் கடந்துபோகும்!
விருச்சிகம்:
ஆலோசனை : முடிவுகள் எடுக்கும்போது பொறுமையும் ஆலோசனையும் தேவை. மற்றபடித் தொடங்கும் செயல்கள் வெற்றியாகும். உறவினர்களால் நன்மை உண்டு. - டேக் கேர் ப்ளீஸ்!
தனுசு:
மரியாதை : வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும். - திறமைக்கு மரியாதை!
மகரம்:
பொறுமை : செயல்கள் அனுகூலமாக முடியும். என்றாலும் சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவை. யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!
கும்பம்:
துணிவு : மனதில் உற்சாகமும் உடலில் சுறுசுறுப்பும் நிறைந்த நாள். தன்னம்பிக்கையும் துணிவும் செயல்களில் வெளிப்படும். முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். - துணிவே துணை!
மீனம்
உற்சாகம் : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் உண்டாகும் நாள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு தருவார்கள். செலவுகள் அதிகரிக்கும். - சிக்கனம் தேவை இக்கணம்!
from Latest News https://ift.tt/3w0XJYh
0 Comments