மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள காவ்டே நகரில் இருக்கும் ஓம் சாய்ராஜ் நகைக்கடைக்குள் காலையில் 10.30 மணிக்கு கொள்ளையர்கள் மூன்று பேர் திடீரென புகுந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஒரே ஸ்கூட்டரில் கடைக்கு வந்தனர். கடை உரிமையாளர் சைலேந்திர பாண்டே பூஜை போட்டு வியாபாரத்திற்கு தயாராக லாக்கரில் இருந்த தங்க நகைகள் அனைத்தையும் பார்வைக்கு வைத்திருந்தார்.
கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தவுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் பார்வைக்கு வைத்திருந்த நகைகள் அனைத்தையும் இரண்டு பேக்களில் எடுத்து போட்டனர். அதோடு பணப்பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்தனர். விகாஸ் பாண்டே நகைகளை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே கொள்கையளர் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் பாண்டேயின் தலையில் சுட்டுக்கொலை செய்துவிட்டு மீண்டும் கடையில் இருந்த நகைகள் அனைத்தையும் இரண்டு பேக்களில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் மூன்று பேரும் தப்பி சென்றனர். கொள்ளை நடந்த கடைக்கு விரைந்து வந்த போலீஸார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் புகைப்படங்கள் தெளிவாக இருக்கிறது. எனவே விரைவில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் அளவு தெரிய வில்லை. அதனை போலீஸார் மதிப்பிட்டு வருகின்றனர்.
from Latest News https://ift.tt/3y9rFmM
0 Comments